மூடுக

தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கம்

நகர்ப்புற ஏழைகள் ஒருங்கிணைக்கப்படாத (unorganized) தொழில்புரிவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். இவர்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்து வருகிறது. தற்பொழுது கிராமப்புற வறுமையைக்காட்டிலும் நகர்ப்புறத்தில் வறுமையானது அதிக தாக்கத்தைக் கொண்டுள்ளது. எனவே நகர்ப்புற பகுதிகளிலுள்ள பொருளாதார நிலையில் மிகவும் நலிவடைந்த குடும்பங்களை பொருளாதார ரீதியாக மேம்பாடு அடைய செய்திடும் முகமாக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கமானது மத்திய மற்றும் மாநில அரசுகளின் 60% : 40% நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி மற்றும் தென்காசி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் நகர்புற வாழ்வாதார இயக்க செயல்பாடுகள்

திருநெல்வேலி மற்றும் தென்காசி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 2015-16ம் ஆண்டில் தமிழ்நாடு தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் தொடங்கப்பட்டு மாநகராட்சியில் 4 மண்டலங்களிலும் 7 நகராட்சி பகுதிகளிலும் மற்றும் 36 பேரூராட்சி பகுதிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் திருநெல்வேலி மற்றும் தென்காசி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மாநகராட்சி பகுதியில் வறுமை கோட்டிற்குகீழ் உள்ள 37488 குடும்பங்களும் நகராட்சி பகுதிகளில் உள்ள 39838 குடும்பங்களும் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் 30166 குடும்பங்களும் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தின்கீழ் கீழ்க்காணும் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சமூக அமைப்புகளை உருவாக்குதல் மற்றும் நிர்வாக மேம்பாடு

வறுமை கோட்டிற்கு கீழ்உள்ள குடும்ப உறுப்பினர்களை கொண்டு மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் இதுவரை 1153 புதிய சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி பகுதிகளில் 13 பகுதிவாரியான கூட்டமைப்புகளும் 2 நகர்புற அளவிலான கூட்டமைப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விடுபட்டுள்ள அனைத்து வறுமை கோட்டிற்கு கீழ்உள்ள குடும்ப மகளிரை சுய உதவிக் குழுக்களில் உறுப்பினர்களாக சேர்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திறன் வளர்ப்பு மற்றும் பயிற்சி :

திருநெல்வேலி மற்றும் தென்காசி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் இதுவரை அமைக்கப்பட்ட 1153 சுய உதவிக் குழுக்களுக்கும் 13 பகுதிவாரியான கூட்டமைப்புகளுக்கும் ஊக்குநர் பிரதிநிதி / உறுப்பினர் மற்றும் நிர்வாகிகளுக்கான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

சுய வேலைவாய்ப்பு

வறுமை கோட்டிற்கு கீழ்உள்ள குடும்பங்களின் பொருளாதார நிலையினை உயர்த்திடும் பொருட்டு அக்குடும்பங்களை சார்ந்த உறுப்பினர்கள் சுய தொழில் துவங்குவதை ஊக்கப்படுத்திடும் முகமாக 796 நபர்களுக்கு இதுவரை முத்ரா திட்டத்தின்கீழ் வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தகுதியும் விருப்பமும் உள்ள அனைத்து நபர்களுக்கும் சுய தொழில் வங்கி கடன் வழங்கிட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வறுமை கோட்டிற்கு கீழ்உள்ள குடும்பங்களை சார்ந்த சுய உதவிக் குழு உறுப்பினர்களின் தொழில் கடன் தேவையினை பூர்த்தி செய்திடும் முகமாக பல்வேறு உற்பத்தி தொழில்களில் ஈடுபட்டுள்ள 202 சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடனாக ரூ.858 இலட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது.

சுழல்நிதி :

திருநெல்வேலி மற்றும் தென்காசி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் இதுவரை அமைக்கப்பட்ட 1153 சுய உதவிக் குழுக்களில் 881 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.10000 சுழல்நிதி மானிய தொகையாக விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள குழுக்களுக்கு தரமதிப்பீடு மற்றும் சுழல்நிதி மானியம் விடுவித்தல் பணி நடைபெற்று வருகிறது.