மூடுக

மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம்


மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம்
விபரம் அதிகாரி பதவி
கண்காணிப்பு குழு தலைவர் மாவட்ட ஆட்சித் தலைவர், தென்காசி
தேசிய உணவுப்பாதுகாப்புச் சட்டதின் கீழ் மாவட்ட குறைதீர் அலுவலர் மாவட்ட வருவாய் அலுவலர், தென்காசி
கண்காணிப்பு குழு கூட்டுநர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் அலுவலர் , தென்காசி


முகவரி பட்டியலில் இடம்பெற்றுள்ள நுகர்வோர் அமைப்புகள்
விபரம் அதிகாரி பதவி
முகவரி பட்டியலில் இடம்பெற்றுள்ள நுகர்வோர் அமைப்புகள் நுகர்வோர் பாதுகாப்பு குழு,செங்கோட்டை, 2.சங்கரன்கோவில் தாலுகா நுகர்வோர் உரிமை பாதுகாப்பு நலச் சங்கம், சங்கரன்கோவில்


மொத்த நியாய விலைக் கடைகளின் எண்ணிக்கை
விபரம் மொத்தம்
மொத்த நியாய விலைக் கடைகள் 658
கூட்டுறவுத் துறை மூலம் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகள் 491
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகள் 158
மகளிர் சுயஉதவி குழு மூலம் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகள் 09

புதிய மின்னணு குடும்ப அட்டை

புதிய குடும்ப அட்டை பெற இணையதள மூலம் விண்ணப்பம் செய்யும் பொழுது கீழ்கண்ட ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

  • குடும்ப தலைவரின் புகைப்படம்
  • குடும்ப தலைவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டைகள் மற்றும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் இல்லாத பட்சத்தில் பிறப்பு சான்று பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்
  • கீழ்கண்ட இருப்பிட ஆதாரங்களில் ஏதேனும் ஒன்று
    • ஆதார் அட்டை
    • மின்சாரக் கட்டண ரசீது
    • வங்கி கணக்கு புத்தகத்தின் முன் பக்கம்
    • எரிவாயு நுகர்வோர் அட்டை
    • சொந்த வீடு இருப்பின் சொத்து வரி ரசீது
    • பாஸ்போர்ட்
    • வாடகை ஒப்பந்த பத்திரம்(வாடகை வீட்டில் குடியிருப்போருக்கு)
    • குடிசை பகுதி மாற்று வாரியத்தின் வீடு ஒதுக்கீட்டு ஆணை
    • தொலைபேசி கட்டண ரசீது
    • வாக்காளர் அடையாள அட்டை

விண்ணப்பதரரின் குடும்பம் தனி சமையலறையுடன் தனியாக வசிப்பது கள ஆய்வில் உறுதி செய்யப்படும் பட்சத்தில் புதிய மின்னணு குடும்ப அட்டை பெறுவதற்கு தகுதியுடையர் ஆவர்.

பெயர் நீக்கம்

  • பெயர் நீக்கம் செய்யப்பட வேண்டிய நபரின் ஆதார் அட்டை
  • பெயர் நீக்கம் செய்யப்பட வேண்டிய காரணத்தை குறிப்பிட்டு, அதற்கு ஆதாரமான ஆவணங்கள்
  • பெயர் நீக்கம் செய்யப்படவுள்ள நபர், தனி குடும்பமாக வசிக்கும் பட்சத்தில் அவர் புதிதாக வசிக்கும் இருப்பிடத்தின் ஆதாரம்
    • குடும்பத் தலைவர் அல்லது உறுப்பினர் இறப்பு காரணமாக பெயர் நீக்கம் கோரப்பட்டால் இறப்புச் சான்று பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
    • திருமணமான உறுப்பினர் பெயரை நீக்கும் பட்சத்தில் திருமணப் பத்திரிக்கை மற்றும் திருமண பதிவுச் சான்று பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
    • புதிதாக வசிக்கும் இருப்பிட ஆதாரம் கணவன் அல்லது மனைவி இருவரில் யாரேனும் ஒருவர் பெயரில் இருந்தால் போதுமானது.

பெயர் சேர்த்தல்

  • பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள்
  • ஆதார் அட்டை அல்லது பிறப்புச் சான்றிதழ் (5வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் இல்லாமல் இருப்பின்)
  • பெயர் சேர்த்தல் கோரப்படும் நபருக்கும் குடும்பத் தலைவருக்கும் உள்ள உறவுமுறையை நிரூப்பிக்க தேவையான ஆவணங்கள்(திருமண பத்திரிக்கைச் சான்று)/திருமண பதிவு சான்று

மின்னணு நகல் குடும்ப அட்டை

தொலைந்து போன மற்றும் POS இயந்திரத்தில் ஸ்கேன் செய்ய முடியாத அட்டைகளுக்கு பதிலாக நகல் அட்டை பெற்று கொள்ளலாம் மேலும் புதிகாக பெயர் சேர்க்கப்பட்டது மற்றும் பெயர் நீக்கம் செய்யப்பட்டது, முகவரி மாற்றம் செய்யப்பட்ட அட்டைகளுக்கு பதிலாக நகல் அட்டை பெற்று கொள்ளலாம்.

இ-சேவை மையத்தில் இணையதள மூலம் விண்ணப்பம் செய்து நகல் அட்டைகான கட்டணம் ரூ20/- வட்ட வழங்கல் அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். மாவட்ட வழங்கல் அலுவலகத்தின் மூலம் நகல் அட்டை அச்சிடப்பட்டு தரப்படும்.