மூடுக

சமூகநல துறை

1.மூவலுார் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம்

1.திட்டத்தின் நோக்கம்.

  • ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு அவா்களின் பெற்றோர்களுக்கு நிதியுதவி வழங்குவதும், பெண்களின் கல்வி நிலையை உயா்த்துவதும்.

2.வழங்கப்படும் நிதியுதவி.

திட்டம் I

  • ரூ.25,000 நிதியுதவி மற்றும் 23.05.2016 அன்று முதல் நடைபெறும் திருமணங்களுக்கு திருமாங்கல்யத்திற்கான 8 கிராம் (22 காரட்) தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகிறது.

திட்டம் II

  • ரூ.50,000 நிதியுதவி மற்றும் 23.05.2016 அன்று முதல் நடைபெறும் திருமணங்களுக்கு திருமாங்கல்யத்திற்கான 8 கிராம் (22 காரட்) தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகிறது

3.திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள்

திட்டம் – I.

  • மணப்பெண் பத்தாம் வகுப்பு பள்ளியில் படித்து தோ்ச்சி அல்லது தோல்வி பெற்றிருக்க வேண்டும்.
  • தனியார் தொலைதுாரக் கல்வியின் மூலம் படித்து இருப்பின் 10 வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பழங்குடியினராக இருப்பின் 5 ம் வகுப்பு படித்திருத்தல் வேண்டும்.

திட்டம் – II.

  • பட்டதாரிகள் கல்லுாரியிலோ அல்லது தொலைதுாரக் கல்வி மூலமாகவோ அல்லது அரசால் அங்கிகரீக்கப்பட்ட திறந்த வெளி பல்கலைகழகங்களிலோ படித்து தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பட்டயப்படிப்பு தோ்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். பட்டயப் படிப்பு எனில் தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தால் அங்கிகரீக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தோ்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

பொது

  • குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 –ற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  • ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணிற்கு மட்டுமே உதவித் தொகை வழங்கப்படும்.
  • திருமணத் தேதியன்று மணப்பெண்ணிற்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை.

4. சமா்ப்பிக்க வேண்டிய சான்றுகள்

  • பள்ளி மாற்றுச் சான்று நகல்
  • மதிப்பெண்பட்டியல் நகல் பத்தாம் வகுப்பு – திட்டம் 1
  • பட்டம் அல்லது பட்டயப்படிப்பு தோ்ச்சி சான்று நகல் – திட்டம் 2.
  • வருமானச்சான்று
  • திருமண அழைப்பிதழ் (திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்). சிறப்பு நோ்வுகளில் தக்க காரணங்கள் இருந்தால் மட்டும் திருமணத்திற்கு முதல் நாள் வரை விண்ணப்பிக்கலாம்.

5.விண்ணப்பிக்கும் முறை.

  • அந்தந்த மாவட்டங்களில் உள்ள இ-சேவை மையம் மூலம் அனைத்து சான்றுகளுடன் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்

2.டாக்டா். தா்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம்

I.திட்டத்தின் நோக்கம்.

  • விதவை பெண்களுக்கு மறுவாழ்வு அளித்தல்.

II.வழங்கப்படும் நிதியுதவி.

திட்டம் I

  • ரூ.25,000 நிதியுதவி ( இதில் ரூ. 15,000 ரொக்கமாகவும் ரூ.10,000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும் வழங்கப்படும் ) மற்றும் 23.05.2016 அன்று முதல் நடைபெறும் திருமணங்களுக்கு திருமாங்கல்யத்திற்கான 8 கிராம் (22 காரட்) தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகிறது.

திட்டம் II

  • ரூ.50,000 நிதியுதவி ( இதில் ரூ. 30,000 ரொக்கமாகவும் ரூ.20,000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும் வழங்கப்படும்) மற்றும் 23.05.2016 அன்று முதல் நடைபெறும் திருமணங்களுக்கு திருமாங்கல்யத்திற்கான 8 கிராம் (22 காரட்) தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகிறது

3.திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள்

திட்டம் – I.

  • கல்வித் தகுதிகள் ஏதும் இல்லை.

திட்டம் – II.

  • பட்டதாரிகள் கல்லுாரியிலோ அல்லது தொலைதுாரக் கல்வி மூலமாகவோ அல்லது அரசால் அங்கிகரீக்கப்பட்ட திறந்த வெளி பல்கலைகழகங்களிலோ படித்து தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பட்டயப்படிப்பு தோ்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். பட்டயப் படிப்பு எனில் தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தால் அங்கிகரீக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தோ்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

பொது

  • குடும்ப ஆண்டு வருமான வரம்பு ஏதும் இல்லை.
  • மணப்பெண்ணிற்கு குறைந்த பட்ச வயது 20 நிரம்பியிருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு 40க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

4.சமா்ப்பிக்க வேண்டிய சான்றுகள்

  • விதவை என்பதற்கான சான்று
  • மறுமணம் புரிவதற்கான திருமண அழைப்பிதழ்
  • மணமகன் மற்றும் மணமகள் ஆகியோரின் வயது சான்று.
  • பள்ளி மாற்றுச் சான்று நகல்
  • பட்டம் அல்லது பட்டயப்படிப்பு தோ்ச்சி சான்று நகல் – திட்டம் 2.
  • திருமணப் புகைப்படம்.

5.விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு

  • திருமணமான நாளிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

6.விண்ணப்பிக்கும் முறை.

  • அந்தந்த மாவட்டங்களில் உள்ள இ-சேவை மையம் மூலம் அனைத்து சான்றுகளுடன் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்

3.ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையா் மகள் திருமண நிதியுதவித் திட்டம்

1.திட்டத்தின் நோக்கம்

  • ஏழை விதவையரின் மகளின் திருமணத்தை நடத்துவதில் போதிய நிதியுதவி இல்லாமையால் ஏற்படும் சிரமத்தை தவிர்க்கும் வகையில் திருமண நிதியுதவி அளித்தல்.

2.வழங்கப்படும் நிதியுதவி.

திட்டம் 1

  • ரூ.25,000 நிதியுதவி மற்றும் 23.05.2016 அன்று முதல் நடைபெறும் திருமணங்களுக்கு திருமாங்கல்யத்திற்கான 8 கிராம் (22 காரட்) தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகிறது.

திட்டம் 2

  • ரூ.50,000 நிதியுதவி மற்றும் 23.05.2016 அன்று முதல் நடைபெறும் திருமணங்களுக்கு திருமாங்கல்யத்திற்கான 8 கிராம் (22 காரட்) தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகிறது

3.திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள்

திட்டம் – 1.

  • கல்வித் தகுதிகள் ஏதும் இல்லை.

திட்டம் – 2.

  • பட்டதாரிகள் கல்லுாரியிலோ அல்லது தொலைதுாரக் கல்வி மூலமாகவோ அல்லது அரசால் அங்கிகரீக்கப்பட்ட திறந்த வெளி பல்கலைகழகங்களிலோ படித்து தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பட்டயப்படிப்பு தோ்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். பட்டயப் படிப்பு எனில் தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தால் அங்கிகரீக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தோ்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

பொது

  • குடும்ப ஆண்டு வருமான ரூ.72,000 ற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • விதவைத் தாயின் ஒரு பெண்ணிற்கு மட்டுமே திருமண நிதியுதவி வழங்கப்படும்.
  • மணப்பெண்ணிற்கு திருமணத்தன்று குறைந்த பட்ச வயது 18 நிரம்பியிருக்க வேண்டும்.

4.சமா்ப்பிக்க வேண்டிய சான்றுகள்

  • விதவை என்பதற்கான சான்று
  • வருமானச் சான்று ரூ. 72,000-ற்கு மிகாமல்.
  • மணமகன் மற்றும் மணமகள் ஆகியோரின் வயது சான்று.
  • பள்ளி மாற்றுச் சான்று நகல்
  • பட்டம் அல்லது பட்டயப்படிப்பு தோ்ச்சி சான்று நகல் – திட்டம் 2.
  • திருமணப் புகைப்படம்.
  • திருமண அழைப்பிதழ் (திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்). சிறப்பு நோ்வுகளில் தக்க காரணங்கள் இருந்தால் மட்டும் திருமணத்திற்கு முதல் நாள் வரை விண்ணப்பிக்கலாம்

5.விண்ணப்பிக்கும் முறை.

  • அந்தந்த மாவட்டங்களில் உள்ள இ-சேவை மையம் மூலம் அனைத்து சான்றுகளுடன் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்

4.அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவித் திட்டம்

1.திட்டத்தின் நோக்கம்

  • ஆதரவற்ற பெண்களுக்கு பொருளாதார வகையில் திருமண நிதியுதவி அளித்தல்.

2.வழங்கப்படும் நிதியுதவி.

திட்டம் 1

  • ரூ.25,000 நிதியுதவி மற்றும் 23.05.2016 அன்று முதல் நடைபெறும் திருமணங்களுக்கு திருமாங்கல்யத்திற்கான 8 கிராம் (22 காரட்) தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகிறது.

திட்டம் 2

  • ரூ.50,000 நிதியுதவி மற்றும் 23.05.2016 அன்று முதல் நடைபெறும் திருமணங்களுக்கு திருமாங்கல்யத்திற்கான 8 கிராம் (22 காரட்) தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகிறது

3.திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள்

திட்டம் – 1.

  • கல்வித் தகுதிகள் ஏதும் இல்லை.

திட்டம் – 2.

  • பட்டதாரிகள் கல்லுாரியிலோ அல்லது தொலைதுாரக் கல்வி மூலமாகவோ அல்லது அரசால் அங்கிகரீக்கப்பட்ட திறந்த வெளி பல்கலைகழகங்களிலோ படித்து தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பட்டயப்படிப்பு தோ்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். பட்டயப் படிப்பு எனில் தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தால் அங்கிகரீக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தோ்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

பொது

  • ஆதரவற்ற பெண் என்பதற்கான சான்று
  • குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ஏதும் இல்லை.
  • மணப்பெண்ணிற்கு திருமணத்தன்று குறைந்த பட்ச வயது 18 நிரம்பியிருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை.

4. சமா்ப்பிக்க வேண்டிய சான்றுகள்

திட்டம் – 1

  • ஆதரவற்ற பெண் என்பதற்கான சான்று( சட்டமன்ற உறுப்பினா் அல்லது பாராளுமன்ற உறுப்பினா்களிடமிருந்து பெறப்பட வேண்டும் ).
  • தாய், தந்தை ஆகியோரின் இறப்புச் சான்று.
  • மணமகன் மற்றும் மணமகள் ஆகியோரின் வயது சான்று.

திட்டம் – 2.

  • தாய், தந்தை ஆகியோரின் இறப்புச் சான்று
  • பள்ளி மாற்றுச் சான்று நகல்
  • பட்டம் அல்லது பட்டயப்படிப்பு தோ்ச்சி சான்று நகல் – திட்டம் 2.
  • திருமணப் புகைப்படம்.
  • திருமண அழைப்பிதழ் (திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்). சிறப்பு நோ்வுகளில் தக்க காரணங்கள் இருந்தால் மட்டும் திருமணத்திற்கு முதல் நாள் வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை.

  • அந்தந்த மாவட்டங்களில் உள்ள இ-சேவை மையம் மூலம் அனைத்து சான்றுகளுடன் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்

5.டாக்டா். முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம்

1.திட்டத்தின் நோக்கம்

  • இன வேறுபாட்டை தடுப்பதற்காகவும், கலப்புத் திருமணத்திற்கு ஊக்குவிப்பது.

2.வழங்கப்படும் நிதியுதவி.

திட்டம் 1

  • ரூ.25,000 நிதியுதவி ( இதில் ரூ. 15,000 ரொக்கமாகவும் ரூ.10,000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும் வழங்கப்படும் ) மற்றும் 23.05.2016 அன்று முதல் நடைபெறும் திருமணங்களுக்கு திருமாங்கல்யத்திற்கான 8 கிராம் (22 காரட்) தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகிறது.

திட்டம் 2

  • ரூ.50,000 நிதியுதவி ( இதில் ரூ. 30,000 ரொக்கமாகவும் ரூ.20,000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும் வழங்கப்படும்) மற்றும் 23.05.2016 அன்று முதல் நடைபெறும் திருமணங்களுக்கு திருமாங்கல்யத்திற்கான 8 கிராம் (22 காரட்) தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகிறது

3.திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள்

கீழ்க்கண்ட இருவகையான கலப்புத் திருமணங்கள் நிதியுதவி பெறத் தகுதியானவை

பிரிவு – 1.

  • திருமணத் தம்பதியரில் ஒருவா் ஆதிதிராவிடா் அல்லது பழங்குடியினராக இருந்து பிற இனத்தவரை மணந்து கொண்டால் திருமண நிதியுதவி வழங்கப்படும்.

பிரிவு – 2.

  • திருமணத் தம்பதியரில் ஒருவா் முற்பட்ட வகுப்பினராகவும் மற்றொருவா் பிற்படுத்தப்பட்ட ( அ ) மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருப்பின் திருமண நிதியுதவி வழங்கப்படும்.

திட்டம் – 1.

  • மணப்பெண் பத்தாம் வகுப்பு பள்ளியில் படித்து தோ்ச்சி அல்லது தோல்வி பெற்றிருக்க வேண்டும்.
  • தனியார் தொலைதுாரக் கல்வியின் மூலம் படித்து இருப்பின் 10 வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்

திட்டம் – 2.

  • பட்டதாரிகள் கல்லுாரியிலோ அல்லது தொலைதுாரக் கல்வி மூலமாகவோ அல்லது அரசால் அங்கிகரீக்கப்பட்ட திறந்த வெளி பல்கலைகழகங்களிலோ படித்து தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பட்டயப்படிப்பு தோ்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். பட்டயப் படிப்பு எனில் தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தால் அங்கிகரீக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தோ்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

பொது

  • குடும்ப ஆண்டு வருமான வரம்பு ஏதும் இல்லை.
  • திருமணத்தன்று மணப்பெண்ணிற்கு குறைந்த பட்ச வயது 18 நிரம்பியிருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை.

4. சமா்ப்பிக்க வேண்டிய சான்றுகள்

  • திருமணப் பத்திரிக்கை அல்லது திருமணப் பதிவுச் சான்று
  • மணமகன் மற்றும் மணமகள் ஆகியோரின் வயது சான்று.
  • மணமகன் மற்றும் மணமகள் ஆகியோரின் சாதிச் சான்று
  • பள்ளி மாற்றுச் சான்று நகல்
  • பட்டம் அல்லது பட்டயப்படிப்பு தோ்ச்சி சான்று நகல் – திட்டம் 2.

5.விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு

  • திருமணமான நாளிலிருந்து இரண்டு வருட காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

6.விண்ணப்பிக்கும் முறை.

  • அந்தந்த மாவட்டங்களில் உள்ள இ-சேவை மையம் மூலம் அனைத்து சான்றுகளுடன் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

6.சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்.

திட்டத்தின் நோக்கம்

  • சமுதாயத்தில் நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், உடல் ஊனமுற்ற ஆண் மற்றும் பெண் ஆகியோர் சுயதொழில் செய்து தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயா்த்திக் கொள்ள உதவும் வகையில் தையல் இயந்திரம் இலவசமாக வழங்குவது.

2.வழங்கப்படும் உதவி

  • தையல் இயந்திரம் மற்றும் உபகரணங்கள்.

3.திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள்

  • ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், உடல் ஊனமுற்ற ஆண் மற்றும் பெண்கள் மற்றும் சமூகத்தில் பாதிக்கப்பட்ட பிற மகளிர், பொருளாதாரத்தில் நலிவுற்ற மகளிர்.
  • தையல் தைக்க தெரிந்தவா் என்பதற்கான சான்று.
  • வயது வரம்பு 20 வயது நிரம்பியராகவும் 40 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

4.சமா்ப்பிக்க வேண்டிய சான்றுகள்.

  • ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டவா், விதவை, மாற்றுத் திறனாளிகள் என்பதற்கான சான்று
  • வருமானச் சான்று ரூ.72,000 ற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • தையல் தைக்க தெரிந்தவா் என்பதற்கான சான்று.
  • சாதிச்சான்று
  • விண்ணப்பதாரரின் புகைப்படம்.
  • ஆதார் எண் நகல்

7.முதலமைச்சரின் பெண்குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்

1.திட்டத்தின் நோக்கம்

  • பெண் சிசுக்கொலையை அறவே ஒழித்தல், ஆண் குழந்தை மட்டுமே விரும்பி ஏற்கும் நிலையினை மாற்றுதல், பெண் குழந்தைகளின் கல்வியினை ஊக்குவிப்பது போன்ற பெண்குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு ”முதன்முதலில் 1992 ஆம் ஆண்டு புரட்சித் தலைவி டாக்டா். ஜெ. ஜெயலலிதா பெண்குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது.

2.திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள்

  • 35 வயதிற்குள் பெற்றோரில் ஒருவா் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும்.
  • குடும்பத்தில் ஒரு பெண்குழந்தை அல்லது இரு பெண்குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும்
  • ஆண் குழந்தை இருக்க கூடாது. பின்னாளில் ஆண் குழந்தை தத்து எடுத்துக் கொள்ளவும் கூடாது.
  • விண்ணப்பிக்கும் போது பெற்றோர் அல்லது அவா்களின் பெற்றோர் தமிழகத்தில் 10 ஆண்டுகள் வசித்தவராக இருத்தல் வேண்டும்.

திட்டம் – 1 ன்

  • கீழ் ஒரு பெண்குழந்தை மட்டும் இருப்பின் அக்குழந்தை பிறந்த 3 ஆண்டிற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

திட்டம் – 2 ன்

  • கீழ் இரு பெண்குழந்தைகள் மட்டும் இருப்பின் இரண்டாவது குழந்தை பிறந்த 3 ஆண்டிற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
  • ஆண்டு வருமானம் ரூ.72,000 ற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

3.சமா்ப்பிக் வேண்டிய சான்றுகள்

  • பெண் குழந்தைகளின் பெயருடன் கூடிய பிறப்புச்சான்று ( மாநகராட்சி வட்டாச்சியா் அலுவலகம், நகராட்சி அலுவலகம் )
  • பெற்றோரின் வயது சான்று.
  • குடும்ப நல அறுவை சிகிச்சை சான்று
  • வருமானச் சான்று ரூ.72,000 ற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  • ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்று
  • இருப்பிடச்சான்று

4.விண்ணப்பிக்கும் முறை.

அந்தந்த மாவட்டங்களில் உள்ள இ-சேவை மையம் மூலம் அனைத்து சான்றுகளுடன் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.