மாவட்டம் பற்றி
தென்காசி மாவட்டமானது, தமிழக அரசின் 12.11.2019 தேதியிட்ட அரசு ஆணை எண் 427 ன் படி, திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிரிந்து 33வது மாவட்டமாக உருவாக்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தின் தெற்கில் திருநெல்வேலி வடக்கில் விருதுநகர், கிழக்கில் தூத்துக்குடி, மேற்கே கேரளத்தையும் எல்லையாக கொண்டுள்ளது. புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் திருத்தலம் மாவட்டத்தின் மைய பகுதியில் அமைந்துள்ளது.சங்கரன்கோவில், பொட்டல் புதூர் தர்கா, இலஞ்சி குமாரர் கோவில் ஆலையம் ஆகியவை வரலாற்று சிறப்பு மிக்க புன்னிய ஸ்தலங்கள் இங்கு உள்ளது. மேலும் வாசிக்க