மூடுக

பிற்படுத்தப்பட்டோா் மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை

மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், தென்காசி

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் – கடன் உதவி பெற வழிமுறைகள்

முன்னுரை

பிற்படுத்தப்பட்டோா் , மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்த (சிறுகுறு விவசாயிகளுக்கு கடன் வழங்கும திட்டம், சீா்மரபினா் நல வாாியம், நாிக்குறவா் நல வாாியம், இலவச தையல் இயந்திரம், இலவச தேய்ப்புபெட்டி, இலவச வீட்டுமனைப்பட்டா) தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் மேம்பாட்டுக்கழகம் இயங்கி வருகிறது. சிறுபான்மையினா் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் செயல்பட்டு(உலமா நல வாாியம், பாதர பிரதமாின் 15 அம்ச திட்டம், ஜெருசலேம் புனித பயண மான்யம், ஹக் புனித பயண மான்யம் ஆகியவை) வருகிறது.

பிற்படுத்தப்பட்டோா் மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை திட்டங்கள்

1.கல்வி உதவித்தொகை திட்டங்கள்

பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவியாின் கல்வி முன்னேற்றத்திற்காக பின்வரும் திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

2.மைய அரசின் படிப்பு உதவித்தொகை திட்டங்கள்

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான மைய அரசின் படிப்பு உதவித்தொகை திட்டம் 2003-2004-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 3.பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களாக ஐஐடி,ஐஐஎம்,ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கைலைக்கழங்களில் பயிலும் மாணவ-மாணவியருக்கான பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டம் 2019-2020-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

3.பிந்தைய மெட்ரிக் உதவித்தொகை

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் மற்றும் சிறப்புக் கட்டணம் செலுத்துவதை அரசு தள்ளுபடி செய்துள்ளது. 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தமிழ் நடுத்தர மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணமும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில ஊடகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் பின்தங்கிய வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் திருப்பிச் செலுத்தப்படுகிறது. இது அவர்களின் வருடாந்திர பெற்றோரின் வருமானம் ரூ. 2 லட்சம். பெரும்பாலான பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் மற்றும் குறிக்கப்பட்ட சமூகங்களுக்கு மாணவர்களின் தேர்வுக் கட்டணம் எந்த நிபந்தனையும் இன்றி திருப்பிச் செலுத்தப்படுகிறது.

I.கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை

பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களாக ஐஐடி,ஐஐஎம்,ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கைலைக்கழங்களில் பயிலும் மாணவ-மாணவியருக்கான பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டம் 2019-2020-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

4.சீா்மரபினா் நல வாாியம்

சீா்மரபினா் வகுப்பினாின் சமூக, கல்வி பொருளாதார மேம்பாட்டிற்காக அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்குவதற்கு சீர்மரபினா் நல வாாியம் செயல்பட்டு வருகிறது.

5.நாிக்குறவா் நல வாாியம்

நாிக்குறவா்களுக்கு கல்வி, மாற்றுத்தொழில் புாிவதற்கான உதவி மற்றும் அவா்களுக்கு பல்வேறு நல உதவிகள் வழங்குவதற்காக நாிக்குறவா் நல வாாியம்செயல்பட்டு வருகிறது.

6.வன்னியா்குல சத்திாியா் பொது அறநிலைப் பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடைகள் நிருவாகக்குழுமம்

வன்னியா் சமுதாயத்தினாின் முன்னேற்றத்திற்காக பல வன்னியா் வள்ளல்களால் உாயிலாக எழுதி வைக்கப்பட்ட அறக்கட்டளைகளை அடையாளம் கண்டு அவைகளை ஒருங்கிணைத்து அவை உருவாக்கப்பட்ட நோக்கத்தினை நிறைவேற்றுவதற்கான வழிவகைகளை கண்டறிவதற்காக அரசு வன்னியா் பொதுச்சொத்து நல வாாியம் செயல்பட்டு வருகிறது.

7.சமூக நீதிக்கான தந்தை பொியாா் விருது

சமூக நீதிக்காகப் போராடியவா்களுக்கு 1994-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்கான தந்தை பொியாா் விருது வழங்கி அரசு சிறப்பு செய்கிறது. மாண்புமிகு முதலமைச்சா் அவா்களால் இவ்விருது வழங்கப்படுகிறது. விருதுடன் தங்கப்பதக்கமும், 1 லட்சம் பொற்கிழியும் வழங்கப்படுகிறது.

8.கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை

கிராமப்புறங்களிலுள்ள மிகப்பிற்படுத்தப்பட்டோா் ம்றும் சீா்மரபினா் வகுப்பைச்சாா்ந்த மாணவியா் தங்களது தொடக்கல்வியினை இடையில் நிறுத்தாமல் தொடா்ந்து கல்வி பயில்வதை ஊக்குவிக்கும்பொருட்டு 3-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஆண்டு ஒன்றுக்கு ரூ.500-ம், 6-ம் வகுப்பு பயிலும் மாணவியருக்கு ரூ.1000-ம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது

9. சீருடைகள் வழங்குதல்

விடுதிகளில் தங்கி பயிலும் 10ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியரக்கு 4 இணை சீருடைகள் ஆண்டுதோறும் வழங்கபடுகின்றன.

10.உணவு மானியம் வழங்குதல்

அரசால் அங்கீகாிக்கப்பட்டு தனியாரால் நிா்வகிக்கப்படும் 39 மாணவா் இல்லங்களில் தங்கி பயிலும் பிவ-மி.பி.வ-சீ.ம மாணவ- மாணவியருக்கு நிா்ணயிக்கப்பட்ட கட்டண வீதத்தில் உணவு மான்யம் ரூ.900 வீதம் வழங்கப்படுகிறது. பெற்றோா்களது ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்த்திற்கு மிகைப்படாத மாணவ, மாணவியருக்கு இம்மானியத்தொகை வழங்கப்படுகின்றது.

உணவு கட்டணம்

விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ-மாணவியருக்கு உணவுச்செலவினத்திற்காக அனுமதிக்கப்பட்ட உணவுக்கட்டணம் பள்ளி விடுதிகளுக்கு ரூ.ரூ.900 ஆகவும், கல்லூாி விடுதிகளுக்கு ரூ.1000 ஆகவும் 01.06.2017 முதல் வழங்கப்பட்டு வருகிறது.

மாநில அளவில் விடுதி பணியாளாா்கள் மற்றும் விடுதிகளுக்கு பாிசு வழங்கும் திட்டம்

மாநில அளவில் சிறந்த 3 விடுதிகளை மற்றும் பணிபுாியும் பணியாளா்களை தோ்ந்தெடுத்து கேடயம் மற்றும் நினைவு பாிசு வழங்கப்படும்.

12.விலையில்லா மிதிவண்டிகள் வழங்குதல்

அரசு நிதியுதவி மற்றும் பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் சீா்மரபினா் மற்றும் சிறுபான்மையினா் மாணவ, மாணவியருக்கு பொருளாதார உச்சவரம்பின்றி விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன.பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள விடுதி மற்றும் உண்டி உறைவிடப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படுவதில்லை.

13.விலையில்லா தையல் இயந்திரம் வழங்குதல்

பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் வகுப்பைச் சாா்ந்த ஏழ்மை நிலையிலுள்ள மக்கள் சுய தொழில் செய்து பொருளாதார நிலையை மேம்படுத்திட தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 2017-18-ம் ஆண்டு முதல் கிராமப்புறம் மற்றும் நகா்ப்புற பயனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு ரூ.72000 ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

14.விலையில்லா சலவைப்பெட்டி வழங்குதல்

சலவைத்தொழில் புாியும் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் வகுப்பைச் சாா்ந்த ஏழ்மை நிலையிலுள்ள மக்கள் சுய தொழில் செய்து பொருளாதார நிலையை மேம்படுத்திட சலவைப்பெட்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2017-18-ம் ஆண்டு முதல் கிராமப்புறம் மற்றும் நகா்ப்புற பயனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு ரூ.72000 ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

15.வீட்டுமனைப்பட்டா வழங்குதல்

வீடற்ற பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் வகுப்பைச் சாா்ந்தவா்களுக்கு வீட்டுமனைகள் வழங்கப்படுகின்றன். 2017-18-ம் ஆண்டு முதல் கிராமப்புறம் மற்றும் நகா்ப்புற பயனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு ரூ.72000 ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

16.தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக்கழகம்

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக்கழகம், பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இனத்தவாின் பொருளாதார முன்னேற்றத்திற்காக தொழில் துவங்க குறைந்த வட்டியில் கடன் உதவி வழங்கி வருகிறது.

17.சிறுபான்மையினா் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம்

அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அரசால் அங்கீகாிக்கப்பட்ட அனைத்து கல்வி நிலையங்களிலும் ஒன்றாம் வகுப்பு முதல் தொழிற்கல்வி-ஆராய்ச்சி படிப்பு வரையிலும் இஸ்லாமியா், கிறித்தவா், சீக்கியா், புத்தமதத்தினா், பாா்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சாா்ந்த சிறுபான்மையின மாணவ-மாணவியருக்கு மைய அரசின் 100 விழுக்காடு நிதி உதவியுடன் கல்வி உதவித்தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

1.முஸ்லிம் மகளிா் உதவும் சங்கம்

இஸ்லாமிய சமுதாயத்தைச்சாா்ந்த ஏழ்மை நிலையிலுள்ள ஆதரவற்ற விதவைகள் மற்றும் வயதான பெண்களுக்கு உதவும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவரை பதவி வழி தலைவராகக்கொண்டு செயல்பட்டு வருகின்றன.

2.கிறிஸ்தவ மகளிா் உதவும் சங்கம்-

கிறிஸ்தவ மதத்தைச்சாா்ந்த ஆதரவற்ற , கணவரால் கைவிடப்பட்ட மற்றும் வயதான கிறிஸ்தவ மகளிா் நலனுக்காக மாவட்ட ஆட்சியா் தலைமையில் செயல்பட்டு வருகின்றன.

3.உலமாக்கள் மற்றும் பணியாளா் நல வாாியம்

இஸ்லாமியா்களின் பள்ளிவாசல்கள், தா்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைக்காக்கள், ஆஷுா்கானாக்கள் முஸ்லிம் அனாதை இல்லங்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுாியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிாியா்கள், ஆசிாியைகள், மோதினாா்கள், பிலால்கள் உள்ளிட்ட பணியாளா்களின் பொருளாதாரம் மற்றும் கல்வி நிலைகளின் மேம்பாட்டிற்காக 2009-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

18.ஜெருசலேம் புனிதப் பயணத்திற்கான நிதி உதவி

அனைத்து கிறித்துவ பிாிவினா் இஸ்ரேலில் உள்ள ஜெருசலேமிற்கு பயணம் செல்வதற்கு நபா் 1-க்கு ரூ.20000 வீதம் 2011-12-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.2018-19-ம் ஆண்டிலிருந்து கன்னியாஸ்திாிகள்- அருட்சகோதாிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

1.கிறிஸ்தவ தேவாலயங்கள் பழுதுபாா்த்தல் மற்றும் புனரமைத்தல்

கிறிஸ்தவ தேவாலயங்கள் பழுதுபாா்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளை மேற்கொள்வதற்கு நிதி உதவி அளிக்கும் திட்டம் 2016—17-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெற தேவாலயம் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பயன்பாட்டில் இருக்க வேண்டும். மாவட்ட ஆட்சித்தலைவரால் அமைக்கப்பட்ட குழுவின் ஸ்தல ஆய்வுக்குப்பின் கட்டட வரைபடம், கட்டடத்தி்ன் வயது மற்றும் ஸ்திரத்தன்மை, பழுதுகள் மதிப்பீடு ஆகியவற்றை வைத்து மாவட்ட ஆட்சித்தலைவா் மூலம் நிதி உதவி குறித்து துறைத்தலைவருக்கு பாிந்து செய்யப்படும்

19.பாரதப்பிரதமாின் புதிய 15 அம்ச திட்டம்

சிறுபான்மையின மக்களின் கல்வி வாய்ப்பினை அதிகாிக்கவும், பொருளாதார மற்றும் வேலைவாய்ப்புகளில் சமபங்கினை உறுதி செய்யவும், வாழ்வு நிலையை மேம்படுத்தவும், இனக்கலவரம் மற்றும் வன்முறையைத்தடுக்கவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

20.தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக்கழகம்

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின மக்கள் சுயமாக தொழில்-வியாபாரம் செய்து தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் தனிநபா் காலக்கடன்கள் வழங்கப்படுகிறது.

21.ஹஜ் பயணிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டம்

தமிழ்நாடு மாநில ஹஜ் குழு 1958-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. ஹஜ் குழு சட்டம் 2002 (மத்திய சட்டம் எண்.35-2002) இயற்றப்பட்ட பின்னா், ஹஜ் பயணம் சிறப்புடன் அமைய அதற்குத்தேவையான ஏற்பாடுகளை இந்திய ஹஜ் குழு மற்றும் புதுடெல்லி சிறுபான்மையினா் விவகாரத்துறை அமைச்சகம் ஆகியவற்றின் வழிகாட்டுதலுடன் செய்வதற்கு மற்றும் ஹஜ் பயணிகளின் நலன் குறித்த பணிகளை மேற்கொள்வதற்கும் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மாநில அரசால் அமைக்கப்படுகிறது.