மூடுக

அணைக்கட்டுகள்

அடவிநயினார் அணை

அடவிநயினார் அணைக்கட்டு பகுதி செங்கோட்டை தாலுகா மேக்கரை கிராமத்தில் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.குற்றாலம் மற்றும் அச்சன்கோவில் பகுதிக்கு அருகில் அடவிநயினார் அணைகட்டு அமைந்துள்ளது.பருவகாலங்களில் குற்றாலத்திற்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகள் இந்த அணைக்கட்டு பகுதிக்கு வருகை புரிகின்றனர்.இந்த அணைக்கட்டு பகுதியில் சிறிய அருவி ஒன்று உள்ளது.

அடைவது எப்படி

தென்காசியிலிருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் உள்ளன.

கடனாநதி அணை

இந்த அணைக்கட்டு பகுதி சிவசைலம் கிராமத்தில் ஆழ்வார்குறிச்சியில் அமைந்துள்ளது. தற்போது இந்த அணைக்கட்டு பகுதிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர்.குற்றாலம் பருவகாலங்களிலும் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிவிக்கும் காலத்திலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிக்கு வருகை புரிகின்றனர்.

அடைவது எப்படி

தென்காசியிலிருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் உள்ளன.

குண்டாறு அணை

குற்றாலம் மற்றும் செங்கோட்டை நகரங்களுக்கு அருகில் உள்ள மலை அடிவாரத்தில் குண்டாறு அணை அமைந்துள்து. குண்டாறு அணைக்கட்டு பகுதிக்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை புரிகின்றனர்.இந்த அணைக்கட்டு பகுதியில் அருமையான காலநிலை நிலவுகிறது.மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து 1கி.மீ. தொலைவில் இந்த அணைக்கட்டு அமைந்துள்ளது.இங்கு அழகான அருவி ஒன்று அமைந்துள்ளது.இந்த அருவிக்கு செல்ல நான்கு சக்கர வாகனம் ஏற்றது.

அடைவது எப்படி

தென்காசியிலிருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் உள்ளன.