ஊரக கட்டிட பராமரிப்பு
இத்திட்டமானது முழுவதும் மாநில அரசினால் செயல்படுத்தப்படும் திட்டமாகும். 2010-2011-ல் ஊரக பகுதியில் உள்ள கட்டிடங்கள் பராமரிப்பிற்காக ஆரம்பிபக்கப்பட்டது. ஊரக பகுதிகளில் சாலைகள், குட்டைகள், குடிநீர் தொட்டிகள், சமுதாயக்கூடங்கள், மதிய உணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள், கிராம பஞ்சாயத்து அலுவலக கட்டிடங்கள், நூலகங்கள் ஆகியவற்றை பராமரிக்கவும், மேம்படுத்தவும் 2014-15-ஆம் ஆண்டில் அரசாணை வெளியிடப்பட்டது மற்றும் 2013-14 ஆம் ஆண்டில் ரூ.200 கோடி இத்திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்யுமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
சிறு பழுதுகள் பணிகள்
- வெள்ளை அடித்தல் மற்றும் வண்ணம் பூசுதல் (மூன்று வருடங்களுக்கு முன் வர்ணம் செய்யப்பட்ட பணிகளும் இவற்றில் எடுத்து செய்யப்பட வேண்டும்.
- RCC கூரை பழுது பார்த்தல்
- சிறு பழுதுகள் டைல்ஸ் உத்திரம் ஒட்டு கட்டிடங்களின் ரீப்பர் பழுதுகள்
- கட்டிட சுவர்களில் ஏற்படும் விரிசல்கள்
- பழுதடைந்த தரையை சரி செய்தல்/மாற்றுதல்
- பழுதடைந்த கதவுகள்/ஜன்னல்கள் மாற்றுதல்
- மயானங்களில் உள்ள எரிமேடை மற்றும் ஓய்வு கூடங்களை பழுது பார்த்தல்
- சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி பழுது பார்த்தல்
பெரும் பழுதுகள் பணிகள்
- ஏற்கனவே உள்ள கட்டிடங்களின் மேற்கூரை பழுது ஏற்பட்டிருந்தால் அவற்றை மாற்றுதல்.
- ஆஸ்பெடாஸ் கூரைகளை முழுவதுமாக மாற்றி புதிய ஓடுகளுடன் கூடிய மேற்கூரை அமைத்தல்.
தேர்வு குழு உறுப்பினர்கள்:
- வட்டார வளர்ச்சி அலுவலர்
- பொறியாளர்
- வார்டு உறுப்பினர்
- பஞ்சாயத்து தலைவர்
- பஞ்சாயத்து துணை தலைவர்