வேளாண்மைத்துறை
பயிர் திட்டம்
தென்காசி மாவட்டம் வேளாண்மைத் தொழிலை முதன்மையாக கொண்ட மாவட்டமாகும். இம்மாவட்டத்தில் கார் (ஜூன் – செப்டம்பர் தென்மேற்கு பருவமழை காலம்) மற்றும் பிசானம் (நவம்பர் – பிப்ரவரி வடகிழக்கு பருவமழை காலம்) ஆகிய இரு பருவங்களில் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. வட்டாரத்திற்கு வட்டாரம் வேறுபட்ட பயிர் சாகுபடி முறை உள்ளது. பிரதான பயிராக நெல்லும் அடுத்தபடியாக பயறுவகைப் பயிர்களும் சாகுபடி செய்யப்படுகிறது. தென்காசி, செங்கோட்டை மற்றும் சிவகிரி பகுதியில் நெல் அதிக அளவி;ல் சாகுபடி செய்யப்படுகிறது. மானாவாரி பகுதிகளில் நீர் ஆதாரம் இருக்கும் பகுதிகளிலும் கூட நெற்பயிர் விவசாயிகளால் சாகுபடி செய்யப்படுகிறது. மானாவாரி மற்றும் புன்செய் பகுதிகளில் மாற்றுப்பயிர் சாகுபடி முறை மொத்த சாகுபடி முறையில் குறைந்த அளவிலேயே உள்ளது. மானாவாரி மற்றும் புன்செய் பகுதிகளில் பயறு மற்றும் சிறுதானிய பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
நெல்லுக்கு அடுத்தபடியாக மாக்காச்சோளம், பயறு வகைகள், நிலக்கடலை மற்றும் எள் ஆகிய பயிர்கள் இம்மாவட்டத்தில் பயிரிடப்படுகின்றன. சங்கரன்கோவில் தாலுகாவில் உள்ள சில பகுதியில் பருத்தி சாகுபடிக்கு தேவையான வளமான கரிசல் மண் இருப்பதால் இப்பகுதியில் அதிகமான பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் மண்வளம் மண்ணின் தன்மை, தட்பவெட்பநிலை, பாசனவசதி ஆகிய காரணிகளும் ஒரு பகுதியின் சாகுபடி முறையினை நிர்ணயிக்கின்றன. மானாவாரி சாகுபடி வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து விதைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் மானாவாரி சாகுபடியில் பயறு மற்றும் சிறுதானிய பயிர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது.
.
மாவட்ட அளவிலான தொழில்நுட்ப பிரிவு
- வேளாண்மை இணை இயக்குநர்
- வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம் மற்றும் மாநில திட்டம்)
- வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு)
- வேளாண்மை அலுவலர் (மத்திய திட்டம்)
- வேளாண்மை அலுவலர் (மாநில திட்டம்)
ஆய்வக பிரிவு
- வேளாண்மை அலுவலர் (உயிர் உர உற்பத்தி மையம்)
மாவட்ட ஆட்சியரக வேளாண்மை பிரிவு
- வேளாண்மை துணை இயக்குநர் (பிபிஎம் – மாவட்ட அளவிலானா ஆட்சியரின் நேர்முக உதவியாளர்)
- வேளாண்மை அலுவலர் (பிபிஎம்)
அமைச்சுப் பணியாளர்கள்
- ஆட்சி அலுவலர்
- கண்காணிப்பாளர்
- உதவியாளர்
- இளநிலை உதவியாளர்
- பதிவறை எழுத்தர்
- வாகன ஓட்டுநர்
- அலுவலக உதவியாளர்
- காவலர்
வட்டார அளவிலான தொழில்நுட்ப பிரிவு
- வேளாண்மை உதவி இயக்குநர்
- வேளாண்மை அலுவலர்
- துணை வேளாண்மை அலுவலர் (துணை வேளாண்மை விரிவாக்க மையம்)
- உதவி விதை அலுவலர்
- உதவி வேளாண்மை அலுவலர்
வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலக அமைச்சுப் பணியாளர்கள்
- கிடங்கு மேலாளர்
- உதவி கிடங்கு மேலாளர்
- உதவியாளர்
- இளநிலை உதவியாளர்
- பதிவறை எழுத்தர்
- வாகன ஓட்டுநர்
- அலுவலக உதவியாளர்
- காவலர்
மாவட்ட தொழில்நுட்ப அலுவலரின் பணிகள்
- வேளாண்மை இயக்குநரிடமிருந்து பெறப்படும் மத்திய, மாநில மற்றும் பகுதி – ஐஐ அரசு திட்டங்களின் செயல் மற்றும் நிதி இலக்குகளை வட்டாரங்களுக்கு பகிர்ந்தளித்தல்.
- மத்திய, மாநில மற்றும் பகுதி – ஐஐ -ன் கீழ் வரப்பெறும் மானியத் திட்டங்களுக்கு பெறப்படும் நிதி ஒதுக்கீட்டினை வட்டாரங்களுக்கு பகிர்ந்தளித்தல்.
- வட்டார அளவிலான அலுவலர்களுக்கு தொழில்நுட்ப செய்திகள் பரவலாக்குதல் மற்றும் பயிற்சி அளித்தல்.
- வேளாண்மை உதவி இயக்குநர்களால் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளை மேற்பார்வையிடல்.
வட்டார தொழில்நுட்ப அலுவலர்களின் பணிகள்
- மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்களால் மத்திய, மாநில மற்றும் பகுதி – ஐஐ-ன் கீழ் ஒதுக்கீடு செய்யப்படும் திட்டப்பணிகளை செயல்படுத்துதல்.
- அணுசரணை ஆராய்ச்சித் திடல்கள், செயல்விளக்கத் திடல்கள் அமைத்து கூராய்வு செய்து அறிக்கை அளித்தல்.
- விவசாயிகள் மற்றும் பண்ணை மகளிருக்கு தொழில்நுட்ப செய்திகள் பரவலாக்குதல் மற்றும் பயிற்சி அளித்தல்
- வருவாய் மற்றும் புள்ளியியல் துறையினருடன் இணைந்து பொதுப்பயிர் மதிப்பீட்டாய்வு, காப்பீட்டுத் திட்ட பயிர் அறுவடை பரிசோதனை மேற்கொள்ளுதல்.
- விவசாயிகளுக்கு தேவையான விதைகள், நுண்ணுரங்கள், உயிh உரங்கள், உயிர் பூஞ்சாண மருந்துகள், உயிர் பூச்சி கொல்லிகளை கொள்முதல் செய்து விநியோகம் செய்தல்.
- உரம் மற்றும் பூச்சி மருந்துகளின் தரத்தினை கண்காணித்தல்.
- பூச்சி மற்றும் நோய் கண்காணிப்பு திடல்கள் அமைத்து அதனடிப்படையில் பரிந்துரை வழங்குதல் அல்லது பூச்சி நோய் தாக்குதலின் தீவிரத்தை தவிர்த்திட நடவடிக்கை மேற்கொள்ளுதல்.
ஆராய்ச்சி நிலையம்
வேளாண் அறிவியல் மையம்.
RVS வேளாண் அறிவியல் மையம் 1994 ஆம் ஆண்டு ரத்தினவேல் சுப்பிரமணியம் நினைவாக TVS கல்வி நிறுவனம் மூலம் திருநெல்வேலியில் ஆரம்பிக்கப்பட்டது. Dr.K.V. குப்புசாமி அவர்கள் தலைமையில் துவங்கப்பட்டது. இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் நிதி உதவியின் மூலம் செயல்பட்டு வருகிறது.
வேளாண் அறிவியல் மையத்தின் பணிகள்
பண்ணை சோதனை
1.புதிதாக வெளியிடப்படும் இரகங்கள் மற்றும் புதிய தொழில் நுட்பங்களை மாவட்டத்தில் செயல்படுத்திட சோதிக்க அமைக்கப்படுகிறது.
முன்னோடி செயல்விளக்கம்
1. உழவர் வயல்களில் புதிய தொழில் நுட்பங்களின் செயல் திறனை விவசாயிகளுக்கு நேரடியாக காண்பிக்கும் வகையில் அமைக்கப்படுகிறது.
2. புதிய தொழில் நுட்பங்களை நிறுவிப்பதோடு மட்டுமல்லாமல் விவசாயிகளின் குழுக்களோடு நவின விவசாய நுட்பங்களை பத்தி விவாதிக்க திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
3. விரிவாக்க செயல்பாடுகளின் மூலம் விவசாயிகளுக்கு புதிய தொழில் நுட்பங்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
4. விவசாயிகளுக்கு தேவையான தரமான விதைகள் மற்றும் நடவு பொருள்கள் வழங்கப்படுகின்றன.
5. வானொலி மற்றும் அலைபேசியின் வாயிலாக விவசாயிகளுக்கு வானிலை ஆலோசனைகள் மற்றும் சந்தை விலை நிர்ணயம் போன்ற தகவல்கள் வழங்கப்படுகிறது.
மாநில தென்னை நாற்றுப்பண்ணை – வடகரை
தென்காசி மாவட்டம், செங்கோட்டை தாலுகாவில் உள்ள வடகரையில் 28.08.1964 அன்று இப்பண்ணை ஆரம்பிக்கப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளதால் வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு பருவமழை ஆகிய இரு பருவங்களிலும் மழையைப் பெருகின்றது. வடகரை பண்ணையின் சராசரி மழை அளவு 1100 மி.மீ ஆகும். இப்பண்ணையில் அங்ககச்சத்து நிறைந்த செம்மண் கலந்த குறுமண் காணப்படுகிறது. பண்ணையினை வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் ஆகியோரால் நிர்வகிக்கப்படுகிறது.
மாநில தென்னை நாற்றுப்பண்ணை செங்கோட்டை, மாநில தென்னை நாற்றுப்பண்ணை வடகரை மற்றும் மற்றும் தனியார் பண்ணைகளிலும் தென்னை ஒட்டுச்சேர்ப்பு பணிகள் நடைபெறுகின்றன. வடகரையில் தென்னை நாற்றுப்பண்ணை தென்காசி மாவட்டத்தின் மத்தியில் அமைந்துள்ள காரணத்தாலும் தரமான தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்வதாலும் விவசாயிகள் பயனடைகின்றனர். ஆண்டிற்கு சராசரியாக நெட்டை கன்றுகள் 17000 மற்றும் நெட்டை ஒ குட்டை கன்றுகள் 13000 தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்து தென்காசி மாவட்டத்திற்கும் பிற மாவட்டங்களுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது.
மாநில தென்னை நாற்றுப்பண்ணை செங்கோட்டை
மாநில தென்னை நாற்றுப்பண்ணை ஆரம்பிக்கப்பட்டது. இப்பண்ணையில் தரமான நெட்டை, நெட்டை ஒ குட்டை குட்டை ஒ நெட்டை மற்றும் குட்டை ஆகிய இரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. 1.95 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள செங்கோட்டை பண்ணையில் வருடத்திற்கு சராசரியாக 25000 தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.
உற்பத்தி மையம்
உயிர் உர உற்பத்தி மையம்
தென்காசி மாவட்டத்தில் உயிர் உர உற்பத்தி மையம் 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 13.09.2011 அன்று உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது. அசோஸ்பைரில்லம் (நெல்), அசோஸ்பைரில்லம் (இதர) ரைசோபியம் (உளுந்து), ரைசோபியம் (எண்ணெய்வித்து) ஆகிய ஐந்து வகையான உயிர் உரங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. வருடத்திற்கு 250 மெட்ரிக் டன் திட உயிர் உரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 200 கிராம் அளவிலான ஒரு திட உயிர் உரம் பாக்கெட் 6 ரூபாய் என்ற வீதத்தில் விநியோகம் செய்யப்படுகிறது.
உயிர் உர பயன்பாட்டின் மூலம் இரசாயன உர பயன்பாட்டை குறைத்திட இவ் உரங்கள் பயன்படுத்தப்படுகிறது. மேலும் மண்ணின் தன்மை மற்றும் சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிப்பதை தடுக்கிறது. மண்ணில் தழைச்சத்தினை நிலைநிறுத்த அசோஸ்பைரில்லம் (நெல்), அசோஸ்பைரில்லம் (இதர), ரைசோபியம் (பயறுவகை) மற்றும் ரைசோபியம் (எண்ணெய்வித்து) ஆகிய உயிர் உரங்கள் பயன்படுத்தப்படுகின்றது. மண்ணில் உள்ள கரையாத மணிச்த்துக்களை கரைத்து தாவரங்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் மாற்றுவதற்கு பாஸ்டோடாக்டீரியா உயிர் உரம் பயன்படுத்தப்படுகிறது. உயிர் உரம் பயன்படுத்துவதன் மூலம் இரசாயன உர பயன்பாட்டிற்கு செலவிடப்படும் தொகையில் 20 முதல் 25 சதவீதம் வரை செலவின குறைப்பு செய்யலாம்.
விவசாயிகள் உயிர் உரம் பயன்படுத்துவதன் மூலம் குறைந்த விலையில் சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்காத நச்சுத்தன்மை அற்ற தரமான மகசூல் பெறப்படுகிறது.
விதை சுத்திகரிப்பு நிலையம்
200 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட விதை சுத்திகரிப்பு நிலையம் 1979-ல் ஆரம்பிக்கப்பட்டது. வருடத்தில் சராசரியாக 180 மெட்ரிக் டன் விதைகள் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.
வேளாண் விரிவாக்க மையங்கள்
நெல் மற்றும் பயறு வகை பயிர்கள் இச்சுத்தி மையத்தில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு தரமான விதைகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வ.எண் | தாலுகா | வேளாண் விரிவாக்க மையங்கள் |
---|---|---|
1 | தென்காசி | தென்காசி |
பன்பொழி | ||
சுந்தரபாண்டியபுரம் | ||
பாவூா்சத்திரம் | ||
2 | வீ.கே.புதூா் | வீ.கே.புதூா் |
சுரண்டை | ||
3 | கடையநல்லூா் | கடையநல்லூா் |
4 | ஆலங்குளம் | ஆலங்குளம் | ஊத்துமலை |
5 | செங்கோட்டை | செங்கோட்டை |
ஆய்க்குடி | ||
அச்சம்புதூா் | ||
6 | சிவகிரி | சிவகிரி |
புளியங்குடி | ||
முள்ளிகுளம் | ||
7 | சங்கரன்கோவில் | சங்கரன்கோவில் |
மடத்துப்பட்டி | ||
கரிவலம்வந்தநல்லூா் | ||
மேலநீலிதநல்லூா் | ||
தேவா்குளம் | ||
சோ்ந்தமரம் | ||
8 | திருவேங்கடம் | குருவிகுளம் |
திருவேங்கடம் |
ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம்
ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம், தென்காசி, கடையநல்லூர், கீழப்பாவூர், சங்கரன்கோவில், மேலநீலிதநல்லூர் மற்றும் குருவிகுளம் வட்டாரங்களில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள் அமைந்துள்ளது. ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலை துறை, வேளாண் விற்பனைதுறை, வேளாண்மை பொறியியல் துறை, விதை சான்றளிப்புத்துறை, ஒருங்கிணைந்து விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்பங்களையும் மானிய திட்டங்களையும் அறியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.