மூடுக

குற்றாலம்

வகை மற்றவைகள்

தென்காசி மாவட்டத்தில் மிக முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக குற்றாலம் அமைந்துள்ளது. இங்கு இயற்கை நீர்வீழ்ச்சிகள், இனிமையான வானிலை மற்றும் இடைவிடாத மழைக்காலம் உண்மையில் பார்வையாளர்களிடம் அசாதரமான கவர்ச்சியை தருகிறது. விறுவிறுப்பான காட்சியை குளிர் காற்று மூலம் அதிகரிக்கிறது. வழக்கமாக மே முதல் செப்டம்பர் மாத்த்திற்கு இடையே உள்ள காலம் பருவகாலமாகும்.

  1. மெயின் அருவி
  2. சிற்றருவி
  3. ஐந்தருவி
  4. குண்டாறு நீர்வீழ்ச்சி
  5. புலியருவி
  6. பழைய குற்றாலம்
  7. செண்பகாதேவி நீர்வீழ்ச்சி

சுற்றுலாப்பயணிகள் அருவிகளில் எந்த நேரத்திலும் குளிப்பதற்கு தேவையான வசதிகளை செய்வதற்கு தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேனருவி மற்றும் செண்பகாதேவி அருவியை தவிர மற்ற அனைத்து நீர்வீழ்ச்சிகளும் எப்போது வேண்டுமானாலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த மலையில் வளர்க்கப்படும் மூலிகை தாவரங்கள் மருத்துவ குணமிக்கவை. ருமாட்டிக் மூட்டு வலிகள், நீண்டகால தலைவலி மற்றும் நரம்பு கோளாறு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குற்றால மலையில் நீண்டகாலம் தங்கியிருந்தால் குணமடைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது

 

புகைப்பட தொகுப்பு

  • குற்றாலம்-ஐந்தருவி
  • ஐந்தருவி1
  • மெயின்-அருவி

அடைவது எப்படி:

வான் வழியாக

தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளம் விமான நிலையத்திலிருந்து சுமார் 120 கி.மீ.

தொடர்வண்டி வழியாக

தென்காசி ரயில் நிலையத்திலிருந்து சாலை வழியாக சுமார் 15 கி.மீ தூரம்

சாலை வழியாக

திருநெல்வேலியிலிருந்து தென்காசி வரை சென்று பின்னர் குற்றாலம் எளிதாக சாலை வழியாக செல்லலாம்.