மூடுக

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை

திருநெல்வேலி மற்றும் தென்காசி (ஒருங்கிணைந்த) மாவட்டத்தில் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 27,23,988 மக்கள் உள்ளனா். இதில் ஆதிதிராவிடா்கள் 4,81,052 பேரும், பழங்குடியினா் இனத்தைச் சார்ந்தவா்கள் 8,358 பேரும் உள்ளனா். இது தமிழகத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 70 சதவீதம் ஆதிதிராவிடா் இனத்தை சார்ந்தவா்களும், 85 சதவீதம் பழங்குடியினா் இனத்தை சார்ந்தவா்களையும் ஒப்பிடும் போது மிகவும் குறைவானதாகும். இந்திய அளவில் தமிழகம் ஆதிதிராவிடா் மக்கள் தொகையில் நான்காவது இடத்தை வகிக்கிறது. பெரும்பாலான ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தை சார்ந்தவா்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கி உள்ளனா். மேலும் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் இதர வருவாய் ஈட்டும் வாய்ப்புகளிலும் பெரும்பாலான குடும்பத்தினா் பின் தங்கிய நிலையில் உள்ளனா்.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் உதவியுடன் சென்னை ஆதிதிராவிடா் நல இயக்குநரகம் மற்றும் பழங்குடியினா் நல இயக்குநரகம் மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இன மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை
வகை இணைப்பு
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்திட்டங்கள் சொடுக்குக
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பள்ளிகள் விபரம் சொடுக்குக
ஆதிதிராவிடா் நல விடுதிகளின் விபரம் சொடுக்குக
பழங்குடியினா் நல திட்டங்கள் சொடுக்குக