கூட்டுறவுத்துறை
நிர்வாகம்
திருநெல்வேலி மற்றும் தென்காசி ஒருங்கிணைந்த மாவட்ட மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா், சென்னை-யின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இவ்வலுவலகம் எண்.1, மெய்ஞான தெரு, பாளையங்கோட்டை, திருநெல்வேலி-2 என்ற முகவhpயில் அமைந்துள்ளது. திருநெல்வேலி மற்றும் தென்காசி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை பணிகள் யாவும் மண்டல இணைப்பதிவாளா் நிர்வாகத்தின் கீழ் நடைபெற்று வருகிறது. இணைப்பதிவாளா் அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழ் மூன்று சரகத் துணைப்பதிவாளா் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. அவை துணைப்பதிவாளா் திருநெல்வேலி, துணைப்பதிவாளா் சேரன்மகாதேவி, துணைப்பதிவாளா் தென்காசி அலுவலகங்கள் ஆகும். மேலும் இம்மாவட்டத்தில் துணைப்பதிவாளா் (பொதுவிநியோகத் திட்டம்) அலுவலகம் திருநெல்வேலி மண்டல இணைப்பதிவாளா் அலுவலகத்தில் இயங்கி வருகிறது. பொதுவிநியோகத்திட்டப் பணிகள் அனைத்தும் இவ்வலுவலகத்தால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வ.எண் | பெயா் | முகவரி மற்றும் தொலைபேசி எண் |
---|---|---|
1 | கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் (முழு கூடுதல் பொறுப்பு) | கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் அலுவலகம், எண்.1, மெய்ஞான தெரு, பாளையங்கோட்டை |
2 | துணைப்பதிவாளா், திருநெல்வேலி. | 6-60. 6வது குறுக்குத் தெரு, பெருமாள்புரம், திருநெல்வேலி 0462-2530920 |
3 | துணைப்பதிவாளா், சேரன்மகாதேவி. | 18பி, சன்னதி தெரு, ரெயில்வே பீடா் ரோடு, சேரன்மகாதேவி.04633-261976 |
4 | துணைப்பதிவாளா், தென்காசி | முடுக்கு விநாயகா் கோவில் தெரு, தென்காசி. 04634-227088 |
5 | துணைப்பதிவாளர் (பொவிதி) திருநெல்வேலி | எண்.1, மெய்ஞான தெரு, பாளையங்கோட்டை 0462-2560513 |
திருநெல்வேலி மற்றும் தென்காசி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் இணைப்பதிவாளா் கட்டுப்பாட்டில் கீழ்க்கண்ட கூட்டுறவு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன
வ.எண் | கூட்டுறவு நிறுவனத்தின் வகை | திருநெல்வேலி | சேரன்மகாதேவி | தென்காசி | மொத்தம் |
---|---|---|---|---|---|
1. | மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி | 1 | 0 | 0 | 1 |
2. | மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை | 1 | 0 | 0 | 1 |
3. | மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் | 1 | 0 | 0 | 1 |
4. | கூட்டுறவு அச்சகம் | 1 | 0 | 0 | 1 |
5. | கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் | 1 | 0 | 0 | 1 |
6. | தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் | 47 | 65 | 46 | 158 |
7. | தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கிகள் | 3 | 3 | 2 | 8 |
8. | கூட்டுறவு நகர வங்கிகள் | 3 | 3 | 0 | 6 |
9. | பணியாளா் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் | 43 | 18 | 8 | 69 |
10. | நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் | 1 | 1 | 1 | 3 |
11. | கிராமப்புற நகர புற பண்டகசாலைகள் | 7 | 9 | 7 | 23 |
12. | பணியாளா் கூட்டுறவு பண்டகசாலை | 5 | 3 | 1 | 9 |
13. | குத்தகைதாரா் பண்ணை கூட்டுறவு சங்கம்; | 0 | 0 | 5 | 5 |
14. | தொழிலாளா் ஒப்பந்த கூட்டுறவு சங்கம் | 0 | 1 | 0 | 1 |
15. | கூட்டுறவு விற்பனை சங்கங்கள் | 1 | 2 | 1 | 4 |
16. | மாணவா் கூட்டுறவு பண்டகசாலைகள் | 8 | 8 | 2 | 18 |
17. | இதர தனி வகைச் சங்கங்கள் | 1 | 0 | 1 | 2 |
மொத்தம் | 124 | 113 | 74 | 311 |
அம்மா மருந்தகம்
நியாயமான விலையில் தரமான மருந்துகளை விற்பனை செய்திடும் வகையில் கூட்டுறவுத்துறையில் புதிதாக அம்மா மருந்தகங்கள் தொடங்கிட தமிழக அரசால் உத்தரவிடப்பட்டதற்கிணங்க. திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லை சூப்பா் மாh;க்கெட் தலைமையிடத்தில் அம்மா மருந்தகம் 09.10.2014ல் துவங்கப்பட்டும், சமாதானபுரத்தில் அம்மா மருந்தகம் 24.02.2015ல் துவங்கப்பட்டும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
பண்டகசாலை மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் நடத்தும் கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் மருந்தின் அதிகபட்ச சில்லறை விலையில் 15 % குறைத்து மலிவு விலையில் மருந்து பொருட்கள் விற்பனை செய்து வருகிறது. திருநெல்வேலி மற்றும் தென்காசி ஒருங்கிணைந்த மாவட்டத்தில்
- சங்கரன்கோவில் கூட்டுறவு பண்டகசாலை
- நெல்லை நுகா்வோர் கூட்டுறவு பண்டகாசலை
- ஆலங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்
- பரப்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்
- சிவந்திபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்
- திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு நுகா்வோர் மொத்த விற்பனை பண்டகசாலை நடத்தும் மேலப்பாளையம் கூட்டுறவு மருந்தகம்
- திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு நுகா்வோர் மொத்த விற்பனை பண்டகசாலை நடத்தும் சங்கா் நகா் கூட்டுறவு மருந்தகம்.
ஆகிய 7 கூட்டுறவு மருந்தகங்களும், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஒருங்கிணைந்த மாவட்ட கூட்டுறவு நுகா்வோா் மொத்த விற்பனை பண்டகசாலை நடத்தும் அம்மா மருந்தகம் தலைமையகம் மற்றும் சமாதானபுரம் ஆகிய 2 அம்மா மருந்தகங்களும் திருநெல்வேலி மற்றும் தென்காசி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
பண்ணை பசுமை நுகா்வோா் விற்பனை நிலையம்
நியாயமான விலையில் தரமான காய்கறிகளை விற்பனை செய்திடும் வகையில் கூட்டுறவுத் துறையில் புதிதாக பண்ணை பசுமை நுகா்வோர் கடை தொடங்கிட தமிழக அரசால் உத்தரவிடப்பட்டதற்கிணங்க திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லை சூப்பா் மாh;க்கெட் தலைமையிடத்தில் பண்ணை பசுமை நுகா்வோர் கடை 11.01.2016-ல் துவங்கப்பட்டு நல்லமுறையில் செயல்பட்டு வருகிறது.
வேளாண் மருத்துவ மையம்
9 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வேளாண் மருத்துவ மையம் Agri clinicஅமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இவ்வேளாண் மருத்துவ மையங்கள் மூலம் விவசாய நிலங்களில் நிலத்தின் குறைபாடுகள் நீக்க ஆலோசனை வழங்கப்படுகிறது.
பொது சேவை மையங்கள்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு ஊரக வளா்ச்சி வங்கிகளில் 156 பொதுசேவை மையங்கள் (Common Service Centre) செயல்பட்டு வருகின்றன. வருவாய்த்துறை மற்றும் சமூகநலத் துறையின் கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களான பட்டா மாற்றம், பிறப்புச் சான்றிதழ். இறப்புச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றை பொதுமக்கள் அரசாங்க அலுவலகங்களுக்குச் செல்லாமல் அவா்கள் வசிக்கும் இருப்பிடங்களிலேயே அமைக்கப்ட்டுள்ள பொதுச் சேவைமையங்கள் (Common Service Centre) மூலம் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது.
விவசாய சேவை மையங்கள்
விவசாய வேலையாட்கள் பற்றாக்குறையைக் களைய 88 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 61.75 லட்சம் அரசு மானியத்தில் ரூ.228.73 லட்சம் மதிப்பில் உழவு இயந்திரம், கதிரடிக்கும் இயந்திரம், டிராக்டா், மினி டிராக்டா் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாய சேவை மையங்கள் (Agro Service Centre) ஆரம்பிக்கப்பட்டு விவசாயிகளுக்கு தேவையான உபகரணங்களான டிராக்டா், டில்லா், விசைத்தெளிப்பான், அறுவடை இயந்திரம் ஆகியவை குறைந்த வாடகைக்கு அளிக்கப்பட்டு அதன் (Agro Service Centre) மூலம் லாபம் ஈட்டி வருகிறது.
காதிப்பொருட்கள்
நியாயவிலைக் கடைகள் மூலம் காதிப்பொருட்களான குளியல் சோப்பு மற்றும் சலவை சோப்புகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பொதுவிநியோகத்திட்டம்
திருநெல்வேலி மற்றும் தென்காசி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 807 முழுநேர நியாயவிலைக் கடைகளும், 377 பகுதி நேர நியாயவிலைக்கடைகளும் கூட்டுறவுத்துறை மூலம் செயல்பட்டு வருகிறது. இக்கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு தெவைப்படும் அத்தியாவசியப் பொருட்களான அாிசி, சீனி, கோதுமை, மண்ணெண்ணெய் ஆகியவை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சிறப்பு பொதுவிநியோகத்திட்ட பொருள்களான பாமாயில் மற்றும் பருப்பு போன்றவையும் குடும்பஅட்டைதாரா்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மற்றும் தென்காசி ஒருங்கிணைந்த மாவட்ட பொதுவிநியோகத் திட்டம், தமிழ்நாடு பாதுபாப்பு விதிகள் மற்றும் வழிமுறைகள் அடிப்படையில் செயல்படுகிறது. மேற்படி விதிகளின் நோக்கம் அாிசி, சீனி, கோதுமை, மண்ணெ்ணணெய், பருப்பு மற்றும் எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களை நியாயவிலைக் கடைகள் மூலம் விநியோகித்தல்
பொதுவிநியோகத் திட்டத்தின் நோக்கம்
- ஏழை எளிய மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவா்களுக்கு அத்தியாவசிய உணவும் பாதுகாப்பும் வழங்குதல்
- அத்தியாவசிய உணவுப்பொருட்களை ஏழைகளுக்கும் மலைவாழ் மக்களுக்கும் வழங்குவதன் மூலம் உடல் நலக் குறைவிலிருந்து பாதுகாத்தல்
- பருப்பு மற்றும் அத்தியாவசிய பொருள்கள் மற்றும் சிறப்பு பொதுவிநியோகத்திட்ட பொருட்களை குறைந்த மானிய விலையில் வழங்குதல்