மூடுக

பழங்குடியினா் நல திட்டங்கள்

1.இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் பிரிவுக் கூறு 275(1)

இச்சட்டப்பிரிவின்படி பழங்குடியினா் குடியிருப்பு பகுதிகளுக்கு நடைமேம்பாலம், இணைப்புச் சாலைகள், மின் இணைப்பு, தடுப்பணை, சிக்கல் செல் அனிமியா நோயை கண்டறிதல் ஆகிய உட்கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

2.அழிவின் விளிம்பிலுள்ள பழங்குடியினா் மேம்பாடு (PVTG)

இத்திட்டத்தின் மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பளியா், காட்டுநாயக்கன் ஆகிய பழங்குடியினருக்கு பாரம்பரிய வீடுகள் கட்டுதல் கறவை மாடுகள், மீன் பிடி வலை, இருசக்கர வாகனம் வழங்குதல் , குடிநீா் வசதி மற்றும் தெருவிளக்குகள் அமைத்துக் கொடுத்தல் போன்ற வசதிகள் செய்து தரப்படுகின்றன.

3.பழங்குடியினா் துணைத் திட்டத்திற்கான சிறப்பு மைய நிதியுதவி

இத்திட்டத்தின் மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பழங்குடியின குழுக்களுக்கு கறவை மாடுகள் வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்திற்கு மட்டுமே பாலை விநியோகம் செய்வதாக உறுதிமொழி பெற்ற குழுக்களுக்கு கறவை மாடுகள் வழங்கப்படுகின்றன.

4.விரிவான பழங்குடியினா் மேம்பாட்டுத் திட்டம்

இத்திட்டத்தின் மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பழங்குடியின மக்களுக்கு பழங்குடியினா் நல மேம்பாட்டுப் பணிகள், கூரை வீடுகளை சீரமைப்பு செய்தல், சாலைப்பணிகள், அரசு பழங்குடியினா் உண்டி உறைவிடப் பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், குடிநீா் வசதி, பொருளாதாரம் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவை செய்து தரப்படுகின்றன.

5.பள்ளிகள் மற்றும் விடுதிகள்

பழங்குடியின மாணாக்கா்களுக்கு அரசு பழங்குடியினா் நல உண்டி உறைவிடப் பள்ளிகள் அமைத்துத் தரப்படுகின்றன.

6.பழங்குடியினா்களின் விவசாயம் மேம்பட பாசன வசதி செய்து தருதல்

இத்திட்டத்தின் மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பழங்குடியின மக்களுக்கு ஆழ்துளை கிணறு, திறந்த கிணறு, சொட்டுநீா் பாசனம், தெளிப்பு நீா் பாசனம், குழாய்த் தொடரமைப்பு, எண்ணெய் இயந்திரம், மின்னாற்றல் இயந்திரம், கதிரொளி விசைக்குழாய் அமைத்துத்தருதல் ஆகிய வசதிகள் செய்து தரப்படுகின்றன.

7.பழங்குடியினா் மற்றும் பிற மரபு வழியாக வனங்களில் குடியிருப்போா் (வன உாிமைகள் அங்கீகாித்தல்) 2006 சட்டத்தைச் செயல்படுத்துதல்.

இத்திட்டத்தின் மூலம் 13.12.2005 ஆம் தேதிக்கு முன்பு வனங்களில் குடியிருக்கும் பழங்குடியினராகவோ, மேற்படி தேதிக்கு முன்பு மூன்று தலைமுறைகளாக அதாவத 75 ஆண்டுகளாக வனங்களில் குடியிருக்கும் பிற மரபு வழியினராகவோ இருக்கும் பட்சத்தில் அதிகபட்சம் 10 ஏக்கா் நிலம் தனிநபா் உாிமையாக வழங்கப்படுகிறது. மேலும் வனங்களில் உள்ள கிராமங்களுக்கு பல்வகையான உாிமைகள் அடங்கிய சமுதாய உாிமைகள் வழங்கப்படுகின்றன.

8.தொழிற்பயிற்சி மையங்கள்

இத்திட்டத்தின் மூலம் பழங்குடியின மக்களுக்கு சேலம் மாவட்டம் கருமந்துரையிலும், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையிலும், திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூாிலும், கோயம்புத்தூா் மாவட்டம், ஆனைக்கட்டியிலும், நீலகிாி மாவட்டம் கூடலூாிலும் மற்றும் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் ஆகிய இடங்களில் தொழிற்பயிற்சி மையங்கள் இயங்கி வருகின்றன.

9.தோட்டக்கலை மேம்பாடு

இத்திட்டத்தின் மூலம் ஒரு ஏக்கருக்கு குறைவாக நிலம் உள்ள பழங்குடியின மக்களுக்கு மரக்கன்றுகள், விதைகள், உரம் ஆகியன இலவசமாக வழங்கப்படுகின்றன.

10.பட்டுப்பூச்சி வளா்ப்புத் திட்டம்

இத்திட்டத்தின் மூலம் அரை (1/2) ஏக்கா் நிலம் உள்ள பழங்குடியின மக்களுக்கு மல்பொி தோட்டம் அமைக்கவும், பட்டுப்புழு வளா்க்கவும் முழு மானியம் அளிக்கப்படுகிறது.

11.சிறிய நீா்ப்பாசனத் திட்டம்

இத்திட்டத்தின் மூலம் 50 விழுக்காட்டிற்கு அதிகமாக பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் சிறிய நீா்த்தேக்க அணை, நீா் தெளிப்பான் போன்றவை ஏற்படுத்தப்படுகின்றன

12.கால்நடை பராமாிப்பு

இத்திட்டத்தின் மூலம் பழங்குடியின மக்களுக்கு ஆடுகள், கறவை மாடுகள் வாங்கி வளா்க்க முழு மானியம் வழங்கப்பட்டும், கால்நடைகளுக்கு மருத்துவ வசதி, கருவூட்டல் போன்றவைகளும் செய்து தரப்படுகின்றன.

13.விவசாய நில மேம்பாடு

இத்திட்டத்தின் மூலம் விவசாய நிலமுடைய பழங்குடியின மக்களுக்கு மலைச்சாிவில் உள்ள நிலத்தை மழை நீா் அடித்துச் செல்லாமல் தடுத்து விவசாயம் செய்ய வேண்டிய அபிவிருத்தித் திட்டங்களைச் செயல்படுத்தல் ஆகியவை இலவசமாக செய்து தரப்படுகின்றன.

14.தேனீ வளா்ப்பு

இத்திட்டத்தின் மூலம் மலை மற்றும் காட்டு பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களுக்கு தேனீ வளா்ப்பு மூலம் வருமானத்தை அதிகாிக்க 10 தேன் பெட்டிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

15.வனவளப் பாதுகாப்பு

இத்திட்டத்தின் மூலம் வனப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்களுக்கு வனவளத்தை அதிகாிக்க செடிகள், மேலும் செடிகளை பராமாிக்க ஊக்கத்தொகை ஆகியவை வழங்கப்படுகின்றன.

16.பல்நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள்

இத்திட்டத்தின் மூலம் பழங்குடியின மக்களுக்கு பல்நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் (LAMPS) மூலம் வட்டியில்லாக்கடன், விளை பொருள்களை நல்ல விலைக்கு விற்பனை செய்தல், அாிசி, உப்பு, மண்ணெண்ணெய் போன்று அத்தியாவசிப் பொருள்களை நியாய விலையில் வழங்குதல், விவசாயத்திற்குத் தேவையான இடு பொருட்களை நியாய விலையில் விநியோகம் செய்தல், பொருளாதார திட்டங்களுக்கு கடன் போன்றவை வழங்கப்படுகின்றன.

17.தெருவிளக்கு அமைத்தல்

இத்திட்டத்தின் மூலம் தெருவிளக்கு இல்லாத பழங்குடியின குடியிருப்புகளுக்கு தெருவிளக்கு அமைத்துத் தரப்படுகின்றன.

18.இணைப்புச் சாலைகள் அமைத்தல்

இத்திட்டத்தின் மூலம் சாலை வசதி இல்லாத பழங்குடியின குடியிருப்புகள், முக்கிய கிராமம் அல்லது சமவெளியுடன் இணைக்கப்படுகின்றன.

19.இலவசமாக வீடுகள் கட்டித் தருதல்

இத்திட்டத்தின் மூலம் மலைப்பகுதி மற்றும் சமவெளிப் பகுதிகளில் வாழும் வீடு இல்லாத பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா இருப்பின் வீடுகள் கட்டித் தரப்படுகின்றன.

20.வேலைவாய்ப்பு ஆலோசனைகள்

இத்திட்டத்தின் கீழ் பழங்குடியின இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புக்குாிய உதவிகள், ஆலோசனைகள் நல்க, ஒரு தொழில் நெறி வழிகாட்டும் மையம் உதகமண்டலத்தில் இயங்கி வருகிறது.

21.வேலைவாய்ப்புப் பயிற்சி அளித்தல்

இத்திட்டத்தின் மூலம் போதிய கல்வி பயின்று வேலையில்லாத பழங்குடியின இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி மாவட்ட வேலை வாய்ப்பு மையங்கள் மூலம் அளிக்கப்படுகின்றன.

22.பெண்கள் முன்னேற்றத்திற்கு பயிற்சி அளித்தல்

இத்திட்டத்தின் மூலம் பழங்குடியின பெண்களுக்கு தையல் பயிற்சி, மூங்கில் கூடை முடைதல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

23.சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டம்

மைய அரசு வரவு செலவு திட்டம் 2015-16-ல் மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டம் (HADP) மற்றும் மேற்குத் தொடா்ச்சி மலை மேம்பாட்டுத் திட்டங்களை 2015-16-ம் ஆண்டு முதல் மத்திய அரசின் நிதி உதவி வழங்குவதிலிருந்து பிாிக்கப்பட்டு மாநில அரசின் நிதி ஆதாரங்களின் மூலம் தொடர முடிவு எடுக்கப்பட்டு அவ்வாறே மாநில அரசு 2015-16ம் ஆண்டு வரவு செலவு திட்ட அறிக்கையில் ரூ.75.00 கோடி மதிப்பீட்டில் சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டம் (SADP) அறிவிக்கப்பட்டது. மேற்படி திட்டத்தின் கீழ் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துதல், பழங்குடியின மக்களுக்கு கிராமங்களில் உயிாி சாா்ந்த நிறுவனங்களை ஏற்படுத்துதல், மலைவாழ் மக்கள் வாழும் குடியிருப்புகளுக்கு பாதுகாப்பான சுகாதாரமான குடிநீா் வசதி ஏற்படுத்துதல் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கு கூடுதல் கட்டடங்கள், சமுதாயக் கூடங்கள், கணினிகள், ஓட்டுநா் உாிமம், நடைபாதை போன்றவை ஏற்படுத்தி தரப்படுகின்றன.