மூடுக

மாவட்டம் பற்றி

தென்காசி மாவட்டமானது, தமிழக அரசின் 12.11.2019 தேதியிட்ட அரசு ஆணை எண் 427 ன் படி, திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிரிந்து தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது.

தென்காசி மாவட்டத்தின் தெற்கில் திருநெல்வேலி வடக்கில் விருதுநகர், கிழக்கில் தூத்துக்குடி, மேற்கே கேரளத்தையும் எல்லையாக கொண்டுள்ளது. புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் திருத்தலம் மாவட்டத்தின் மைய பகுதியில் அமைந்துள்ளது.சங்கரன்கோவில், பொட்டல் புதூர் தர்கா, இலஞ்சி குமாரர் கோவில் ஆலையம் ஆகிய வரலாற்று சிறப்பு மிக்க புன்னிய ஸ்தலங்கள் இங்கு உள்ளது.

மாவட்டத்தின் செழிப்பூட்டும் விவசாயத்திற்கு, சிற்றாறு மற்றும் அனுமன்நதியிலிருந்து பாசனத்திற்கு செல்லும் நீரே காரணம். மேலும் குண்டாறு, அடவிநயினார், கருப்பாநதி, இராமநதி அணைகளும் பாசனத்திற்கு பெருமளவில் பயன்படுகிறது. தென்காசி மாவட்டத்தில் 800 மேற்பட்ட ஊரணிகள் உள்ளது. விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் 65% மேற்பட்ட மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

புகழ்பெற்ற குற்றால அருவி, சிற்றாற்றில் அமைந்துள்ளது. மருத்துவ குணமிக்க மூலிகை நீராக கருதப்படுகிறது. மேலும் பேரருவி, ஐந்தருவி, புலி அருவி போன்றவைகளும் இங்கு அமைந்துள்ளது.சிவனின் மறுவடிமான நடராஜரின் ஐந்து சபைகளில் ஒன்றான சித்திரை சபை சடையானது இங்கே உள்ள திருக்குற்றால நாத சாமி கோவிலில் இருக்கிறது. இதன் சிறப்பு பற்றி திரிகூடராசப்ப கவிராயர், தன்னுடைய குற்றால குறவஞ்சியில் பாடியுள்ளார்.