மூடுக

வருவாய் நிா்வாகம்

வருவாய்த்துறை கீழ்க்கண்ட பரந்த குறிக்கோள்கள் அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

1. தமிழ்நாட்டில் நடைமுறைபடுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் பயன்களை சிறந்த முறையில் மக்களிடையே கொண்டு செல்வது.
2. இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளித்தல்.
3. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு நிலங்களைப் பாதுகாத்து, முறையாக நில ஆவணங்கள் பராமரித்தல்
4. நிலச்சீர்த்திருத்த சட்டங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் தேவையின் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு நிலம் வழங்குதல்.

இத்துறையானது விவசாயிகள், மாணவர்கள், வேலைவாய்ப்பில்லாதவர்கள், பணிபுரிபவர்கள், சமூகத்தின் அடித்தட்டு மக்கள், தொழில்முனைவோர் மற்றும் தொழிற்சாலை ஆகியோருக்கான சேவைகள் வழங்குவது மற்றும் தேவையான சான்றிதழ்களான சாதிச்சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ், வருமான சான்றிதழ், நில உடமைகளில் உரிய திருத்தம் மற்றும் பல்வேறு உரிமங்கள் வழங்குவதன் மூலம் அவர்களின் மேம்பாட்டிற்கு இத்துறை வழிவகுக்கிறது. மேலும் இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் அனைத்து வகையான தேர்தல்களிலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் பங்கு மகத்தானது.

இத்துறை தொடங்கப்பட்டது முதல், இயற்கை சீற்றம் மற்றும் மனித சக்தியால் ஏற்படும் அழிவுகளிலிருந்து மீட்பு பணியை முன்னின்று மேற்கொள்கிறது. இயற்கை சீற்றத்தின் போது பாதிக்கப்படும் மக்களை மீட்டு, நிவாரணம், மறுவாழ்வு மற்றும் குடியமர்த்துதல் பணிகளை அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்துறை, பேரிடர் மேலாண்மை சம்மந்தமான எல்லா பணிகளையும் மேற்கொள்வதில் மையமாக விளங்குவதால் தமிழக அரசால் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை என தற்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வருவாய் நிா்வாகம்
அலுவலகம் எண்ணிக்கை
வருவாய் கோட்டம் 2
வருவாய் வட்டம் 8
வருவாய் குறுவட்டம் 30
வருவாய் கிராமங்கள் 246

 

வருவாய் கோட்டம் (2)
வ.எண் வருவாய் கோட்டத்தின் பெயா்
1. தென்காசி
2. சங்கரன்கோவில்

 

வருவாய் வட்டம் (8)
வ.எண் வருவாய் வட்டத்தின் பெயா்
1. தென்காசி
2. கடையநல்லூா்
3. திருவேங்கடம்
4. சங்கரன்கோவில்
5. செங்கோட்டை
6. வீரகேரளம்புதூர்
7. ஆலங்குளம்
8. சிவகிரி

 

வருவாய் குறுவட்டம் (30)
வ.எண் வட்டத்தின் பெயர் குறுவட்டத்தின் பெயர்
1. தென்காசி கல்லூரணி
தென்காசி
கடையம்
ஆழ்வாா்குறிச்சி
2. கடையநல்லூர் புளியங்குடி
கடையநல்லூா்
ஆய்க்குடி
3. திருவேங்கடம் காிசல்குளம்
திருவேங்கடம்
பழங்கோட்டை
4. சங்கரன்கோவில் காிவலம்வந்தநல்லூா்
சோ்ந்தமங்கலம்
சங்கரன்கோவில்
வீரசிகாமணி
குருக்கள்பட்டி
5. செங்கோட்டை செங்கோட்டை
பணிபொழி
இலத்தூா்
6. வீரகேரளம்புதூா் வீரகேரளம்புதூா்
சுரண்டை
கருவந்தா
ஊத்துமலை
7. ஆலங்குளம் கீழப்பாவூர்
நெட்டூா்
வேங்கடாம்பட்டி
புதுப்பட்டி
ஆலங்குளம்
8. சிவகிாி சிவகிாி
கூடலூா்
வாசுதேவநல்லூா்

 

வருவாய் கிராமங்கள் (251)
வ.எண் வருவாய் வட்டத்தின் பெயர்
1 தென்காசி (PDF 394 KB)
2 கடையநல்லூா் (PDF 390 KB)
3 திருவேங்கடம் (PDF 393 KB)
4 சங்கரன்கோவில் (PDF 392 KB)
5 செங்கோட்டை (PDF 389 KB)
6 வீரகேரளம்புதூா் (PDF 392 KB)
7 ஆலங்குளம் (PDF 394 KB)
8 சிவகிாி (PDF 389 KB)