மூடுக

அருள்மிகு குற்றாலநாத சுவாமி திருக்கோயில் குற்றாலம்

வகை மற்றவைகள்
  • சங்க இலக்கியங்களில் பாடப்பெற்ற திருத்தலம்.
  • வைணவத் திருத்தலமாய் இருந்து அகத்திய முனிவரால் சைவத் திருத்தலமாக மாற்றப்பட்ட திருக்கோயில்.
  • சைவ சமயக் குரவர்களில் முதல்வரான திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற திருத்தலம்.
  • மேலும் சைவ சமய குரவர்களான சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகியோர் பாடிப்பரவிய திருத்தலம்.
  • அருணகிரிநாதர் பாடியுள்ள திருத்தலம்.
  • தமிழகத்தில் நடராஜப்பெருமான் நடனமாடிய ஐந்து சபைகளுள் “சித்திர சபை” அமையப்பெற்ற திருத்தலம்.

புகைப்பட தொகுப்பு

  • நடராஜர் ஓவியம்
  • குழல்வாய் மொழி கோவிலின் முழுத் தோற்றம்
  • குற்றால நாதர் கோவிலின் முகப்புத் தோற்றம்

அடைவது எப்படி:

வான் வழியாக

தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளம் விமான நிலையத்திலிருந்து சுமார் 98 கி.மீ.

தொடர்வண்டி வழியாக

தென்காசி ரயில் நிலையத்திலிருந்து சாலை வழியாக சுமார் 6 கி.மீ தூரம்

சாலை வழியாக

திருநெல்வேலியிலிருந்து தென்காசி வரை சென்று பின்னர் குற்றாலம் எளிதாக சாலை வழியாக செல்லலாம்.