அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் சங்கரன்கோயில்
வகை மற்றவைகள்
- சைவ, வைணவ சமய ஒற்றுமையை உணர்த்தும் வண்ணம் சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராகக் காட்சிதரும் திருத்தலம்.
- 10ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இத்திருக்கோயில், நிலநடுக்கோட்டிற்கு நேரே சூரியன் பிரகாசிக்கும் தினங்களான மார்ச் 21, 22, 23 மற்றும் செப்டம்பர் 21, 22, 23 ஆகிய தினங்களில் அதிகாலைச் சூரிய ஒளிக்கதிர்கள் மூலவரான சங்கரலிங்க சுவாமி மீது படும் வண்ணம் கட்டப்பட்ட கோயில் கட்டடக் கலையின் அற்புதங்களுள் ஒன்று.
- தமிழ் ஆண்டின் ஆடி மாதத்தில், இத்திருக்கோயிலின் இறைவியான கோமதி அம்மன் மேற்கொள்ளும் தவக்காட்சி (ஆடித்தபசு) லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் நிகழ்வாகும்.
- தென்பாண்டி நாட்டின் பஞ்சபூதத் தலங்களுள் மண் தலம் இத்திருக்கோயில்.
புகைப்பட தொகுப்பு
அடைவது எப்படி:
வான் வழியாக
தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளம் விமான நிலையத்திலிருந்து சுமார் 95 கி.மீ.
தொடர்வண்டி வழியாக
தென்காசி ரயில் நிலையத்திலிருந்து ரயில் வழியாக சுமார் 37 கி.மீ தூரம்
சாலை வழியாக
திருநெல்வேலியிலிருந்து சங்கரன்கோவில் வரை எளிதாக சாலை வழியாக செல்லலாம்.