Close

4வது பொதிகை புத்தகத் திருவிழா 2026

நான்காவது பொதிகை புத்தகத் திருவிழா – 2026

அறிவே அற்றங் காக்கும் கருவி என்ற அய்யனின் வரிகளுக்கு இணங்க, சமூகத்தை ஏற்றத்தாழ்வுகள் இல்லாத நிலைக்கு உயா்த்திட, அறிவாா்ந்த  எதிா்காலத்தை நிறுவிட நம் அனைவருக்கும் புத்தக வாசிப்பு இன்றியமையாதது.எனவே இங்கு குழந்தைகள் முதல் பொியவா்கள் வரை குறிப்பாக மாணவ, மாணவியா்களிடையே வாசிப்பின் அவசியத்தையும் அதன் மூலம் விளையும் பயன்களையும் கொண்டு சோ்க்க தமிழ்நாடு அரசு ஒரு முன் மாதிாி மாநிலமாக புத்தக வாசிப்பினை மக்கள் இயக்கமாக எடுத்துச்செல்கிறது. சென்னை புத்தகத் திருவிழா போன்ற விழாக்களை மாவட்டங்கள் தோறும் முன்னெடுத்து நடத்திட அறிவுறுத்தியுள்ளது.இதன் மூலம் தொண்மையான மொழி வரலாறும், பெரும் இலக்கிய செழுமையும், சங்கம் முதல் இன்றுவரை தொடரும் இலக்கிய மரபையும் கொண்ட நம் தமிழ் மொழியைக் கொண்டாடும் வாய்ப்பாக இத்தகைய புத்தக திருவிழாக்கள் அமையும் என்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்போில், தென்காசியில் நான்காவது முறையாக மாவட்ட நிா்வாகமும், தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கமும் இணைந்து, தென்காசியில் அமைந்துள்ள இ. சி. ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 30.01.2026 முதல் 08.02.2026 வரை இப்புத்தகத் திருவிழாவை நடத்துகின்றன.

சிறப்பு விருந்தினா்கள்

images (1)
எழுத்தாளர் திரு. பவா செல்லத்துரை தலைப்பு - தமிழுக்கு மூன்று புதிய நாவல்கள் ஓர் அறிமுகம்
வில்லிசையரசி செல்வி. மா. மாதவி நிகழ்ச்சி - வில்லிசைக் கச்சேரி

சிறப்பு விருந்தினா்கள்

எழுத்தாளர் திரு. சு. வேணுகோபால் தலைப்பு - கண்ணதாசனின் கவித்துவம்
கலைமாமணி கவிஞர். யுகபாரதி தலைப்பு - பாட்டொன்று கேட்டேன்
கவிஞா். ஆகாச முத்து தலைப்பு - விக்ரமாதித்யன் கவிதைகள்

சிறப்பு விருந்தினா்கள்

எழுத்தாளர் திரு. ஜா.ராஜகோபாலன் தலைப்பு - வாசிப்பும் வாழ்க்கையும்
எழுத்தாளர் திருமதி. அகிலாண்ட பாரதி தலைப்பு - மனங்களின் நடுவே
கலைமாமணி கவிஞா் திரு. கலாப்ரியா தலைப்பு - கவிதைகள் காட்டும் காட்சிகள்
மதுக்கூர் இராமலிங்கம் குழுவினர் பட்டிமன்றம் தலைப்பு - சமூக மாற்றத்திற்கு பெரிதும் துணைபுரிவது
பேச்சா? எழுத்தா?

சிறப்பு விருந்தினா்கள்

எழுத்தாளர். திரு. போகன் சங்கர் தலைப்பு - தமிழ் இலக்கியமும் மலையாள இலக்கியமும்
எழுத்தாளர். திரு. மனுஷ்யபுத்திரன் தலைப்பு - விட்டு விடுதலையாகி

சிறப்பு விருந்தினா்கள்

எழுத்தாளர். திரு. நாஞ்சில் நாடன் தலைப்பு - கற்பனவும் இனி அமையும்
எழுத்தாளர். திரு. சுனில் கிருஷ்ணன் தலைப்பு - இந்திய இலக்கியம்
எழுத்தாளர். திரு. கே. என். செந்தில் தலைப்பு - இருளும் ஒளியும்

சிறப்பு விருந்தினா்கள்

எழுத்தாளர். திரு. சோ. தர்மன் தலைப்பு - படைப்பும் படைப்பாற்றலும்
எழுத்தாளர். திரு. இராயகிரி சங்கர் தலைப்பு - ஆ. மாதவனின் புனைவு உலகம்
கதைசொல்லி இரா. சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன் தலைப்பு - பொதிகை மலைச்சாரல் தொகுப்பிலிருந்து சில கதைகள்

சிறப்பு விருந்தினா்கள்

கதைசொல்லி கோ. இராஜாராம் தலைப்பு - அஜிதன் – முடியாட்டம் சிறுகதை
எழுத்தாளர். திரு. கமலக்கண்ணன் தலைப்பு - சினிமாவும் வாழ்க்கையும்
பேராசிரியர் சிவகாசி இராமச்சந்திரன் குழுவினர் பட்டிமன்றம் தலைப்பு - மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை
அந்த காலத்திலா? இந்த காலத்திலா?

சிறப்பு விருந்தினா்கள்

முனைவர் இ.சா. பர்வீன் சுல்தானா தலைப்பு - வல்லமை தாராயோ
கவிஞர். திரு. காளிதாஸ் தலைப்பு - நவீன கவிதைகளில் பெண் கவிஞர்களின் பாடுபொருள்
எழுத்தாளர். திரு. வீரசோழன் திருமாவளவன் தலைப்பு - நுண்ணறிவு காலமும் மனித மனதின் ஆழமும்

சிறப்பு விருந்தினா்கள்

எழுத்தாளர். திரு. எம். கோபால கிருஷ்ணன் தலைப்பு - புத்தகங்களை கைவிடாதீர்கள்
எழுத்தாளர். திரு. மானசீகன் தலைப்பு - நவீன சமூகத்திற்கான பாரதி
மருத்துவர் திரு. கு. சிவராமன் தலைப்பு - இனி நோய் வாராதிருக்க

சிறப்பு விருந்தினா்கள்

எழுத்தாளர். திரு. சுரேஷ் பிரதீப் தலைப்பு - வாசிப்பின்மையால் ஏற்படும் இழப்புகள்
எழுத்தாளர். திரு. கோகுல் பிரசாத் தலைப்பு - இருபதாம் நூற்றாண்டின் ஐரோப்பிய இலக்கியம்
கவிஞர். திரு. மகுடேஸ்வரன் தலைப்பு - தமிழ்க்கவிதையின் கவித்துவம்
பட்டிமன்றப் பேச்சாளர். திருமதி. கவிதா ஜவஹர் தலைப்பு - ஒரு சொல் கேளீர்

புகைப்பட தொகுப்பு

காணொளி தொகுப்பு

தினசாி நிகழ்ச்சி காணொளி நேரடி ஒளிபரப்பு live-6366830_960_720-removebg-preview

நாள் 3 (01.02.2026) live-6366830_960_720-removebg-preview

விழா நடைபெறும் இடம்